Home » விடுதலை » அடிமைத்தனத்திலிருந்து » நம்மை கட்டுப்படுத்தும் அடிமைத்தனங்களிலிருந்து வெளியே வருவது எப்படி?

நம்மை கட்டுப்படுத்தும் அடிமைத்தனங்களிலிருந்து வெளியே வருவது எப்படி?


               

                    

You can read it in English here

அன்புள்ள நண்பரே, அடிமைத்தனத்தில் சிக்கி அதில் இருந்து வெளியே வற போராடிக்கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் கட்டபற்றிக்கும் அடிமைத்தனம் போதை, சூதாட்டம், ஆபாச படங்கள், சுயஇன்பம் அல்லது வேறு ஏதாவதாக இருக்கலாம். அடிமைதனத்திலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பதை குறித்து வேதத்தின் அடிப்படையில் பார்க்கலாம். 

அடிமைத்தனங்களும் அதின் வேர்களும் 

அடிமையாக்கும் பழக்க வழக்கங்களில் ஒருவர் முதல் முறையாக அணுகுவது, ஒருவேளை விளையாட்டாக இருக்கலாம்; ஒரு ஆர்வமாக அல்லது ஒரு வேடிக்கையாக கூட இருக்கலாம். அவர் நினைக்கலாம், நான் ஒரு முறை மாத்திரம் இதை செய்துவிட்டு, அதற்குப் பின்பு அதை முற்றிலுமாக நிறுத்தி விடுவேன். உதாரணத்திற்கு சூதாட்டம் ஒரு கேளிக்கையாக அல்லது வேடிக்கையாக ஆரம்பிக்கலாம் . ஆரம்ப வெற்றிகள் ஒருவரை மேலும் வெற்றிக்கு செல்ல கட்டாயப்படுத்தக்கூடும். ஆனால் இழப்புகள் கூடும் பொழுது, ஆரம்ப லாபங்களை அவை ஆரம்பத்தில் கிடைத்த லாபங்களை விழுங்கி விடும். இழந்த பணத்தை மீட்க பலர் மீண்டும் சூதாட்டத்திற்கு செல்கின்றனர். ஆனால் சூதாட்ட இயந்திரங்களை எப்போதுமே மனிதர்களால் வெல்ல முடியாது. பெரும்பாலோர் சூதாட்டத்திற்கு அடிமையாகி கடனில் முடிகிறார்கள். இப்படித்தான் ஒவ்வொரு அடிமைத்தனமும் ஒரு விளையாட்டாக ஆரம்பித்து பின்பு அது நம்முடைய வாழ்க்கையைக் கட்டி நம்மை அடிமையாக்கி நம்முடைய எல்லாவிதமான அமைதியையும் சமாதானத்தையும் நம்மிடத்தில் இருந்து இந்த அடிமைத்தனம் திருடி விடுகிறது.

பிரியமானவர்களே, இன்று ஒரு வேலை ஏதாவது ஒரு அடிமைத்தனத்திலேயே நீங்க சிக்கி இருந்தால், சீக்கிரமாக அந்த அடிமைத்தனத்தை கண்டுபிடித்து அதன் பேரை பிடுங்கிப் போடுவது நலமாய் இருக்கும். நீங்கள் ஒரு வேலை ரகசியமாக இச்சித்து, ஆபாசத்திற்கும் சுயஇன்பத்திற்கும் அடிமையாகிறீர்களா? மது அருந்துவதன் மூலமும், மருந்துகளை உட்கொள்வதன் மூலமும் நீங்கள் அமைதியைக் காணலாம் என்று நினைக்கிறீர்களா? 

எந்த ஒரு அடிமைத்தனமும் நம்முடைய வாழ்க்கையிலே ஒரு திருப்தியையோ நன்மையையோ கொண்டு வராது அது துக்கத்திலும் கஷ்டத்திலும் கண்ணீரிலும் நம்முடைய வாழ்க்கையை தள்ளிவிடும். வேடிக்கை விரைவில் முடிவடையும் மற்றும் அடிமைத்தனத்தின் வலி விரைவில் நம் வாழ்க்கையில் பரவும். பல சூதாட்டக்காரர்கள் கடனில் முடிகிறார்கள். மருந்துகள் மற்றும் குடிப்பழக்கம் காரணமாக பலர் ஆரோக்கியத்தை இழக்கின்றனர். ஆபாசமும் சுயஇன்பமும் குற்ற உணர்ச்சிகளுக்கு வழிவகுக்கும். 

நம் எதிரி யார்? 

ஒருவேளை அனேகர் சொல்லலாம், நான் இந்த குடிப்பழக்கத்தை விட நினைக்கிறேன். ஆனால் என்னால் விட முடியவில்லை. இந்த போதை மருந்துகளை எடுப்பது நான் விட நினைக்கிறேன். ஆனால் என்னால் விட முடியவில்லை. ஏன் இப்படி நம்மால் விட முடியாத ஒரு அடிமைத்தனத்திலே நாம் சிக்கியிருக்கிறோம்? எவ்வளவுதான் மயன்றாலும் ஏன் இந்த அதில் இருந்து வெளியே வர முடியவில்லை?

பைபிள் கூறுகிறது, ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

இந்த அடிமைத்தனத்திலே, நம்முடைய எதிராளி ஒரு மாம்சமான ஒரு மனிதன் அல்ல ஆனால் நாம் போராடுவது பொல்லாத ஆவிகளோடு போராடுகிறோம். இந்த பொல்லாத ஆவிகள் மனுஷனுடைய சமாதானத்தையும் மனுஷனுடைய அமைதியையும் திருடுவதற்காக முயற்சிக்கிறது.

இந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியே வர முயற்சிக்கும் பொழுது நம்முடைய போராட்டமோ அந்தகார லோகாதிபதிகளுக்கும் வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளுக்கும் எதிரானது. இவை நீங்கள் செய்ய விரும்பாத விஷயங்களைச் செய்ய உங்களைத் தூண்டுகிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரி இடமிருந்து நாம் வெற்றி பெற இயேசு என்று நமக்கு உதவி செய்ய விரும்புகிறார். எல்லா அடிமைத்தனத்தையும் ஆண்டவரின் வல்லமையால் உடைக்க முடியும். இயேசுவின் இரத்தம் எல்லா பழக்கங்களிலிருந்தும் உங்களை விடுவிக்கும். தயவுசெய்து உங்கள் வாழ்க்கையை கடவுளிடம் ஒப்படையுங்கள். 

அடிமை பழக்கத்திலிருந்து எப்படி வெளி வருவது?

அன்புள்ள நண்பரே நம்முடைய எல்லாவிதமான அடிமை பழக்கங்களை விட நம்முடைய ஆண்டவர் வல்லமை உடையவர். அவர் உங்களை விடுவிக்க முடியும். குமாரன் (இயேசு) உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள், என்று பைபிள் கூறுகிறது. இன்று உங்களை விடுவிக்க இயேசு விரும்புகிறார். அவர் எல்லா பழக்கங்களிலிருந்தும் விடுவிக்க விரும்புகிறார். உங்கள் கடந்த கால தவறுகளை மன்னித்து உங்களை ஒரு புதிய படைப்பாக மாற்ற அவர் விரும்புகிறார். உங்களை போதைக்கு இட்டுச்செல்லும் சோதனையை சமாளிக்க கடவுள் உங்களுக்கு பலத்தை அளிக்க முடியும். நீங்கள் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். 

ஒரு எஜமான்

உங்கள் வாழ்க்கையில் இரண்டு எஜமானர்கள் இருக்க முடியாது. உங்கள் எஜமானர் யார் என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இது சாத்தானா அல்லது கடவுளா? இயேசு சொன்னார், “இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.” 

அன்புள்ள நண்பரே, இயேசுவை உங்கள் எஜமானராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? இயேசு உங்கள் எஜமானராக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு நீங்கள் அவருடைய அனுமதியைப் பெற வேண்டும். நீங்கள் கடவுளின் குழந்தை. வேறு யாரும் உங்கள் எஜமானராக இருக்க முடியாது. இன்று உங்கள் எஜமானரை கவனமாகத் தேர்ந்தெடுங்கள். கடவுள் உங்களுக்கு சமாதானம் கொடுக்க விரும்புகிறார். அவர் உங்கள் அடிமைத்தனத்தை உடைத்து எல்லா பழக்கங்களிலிருந்தும் உங்களை விடுவிக்க விரும்புகிறார். 

வேதம் சொல்கிறது, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். இயேசுவை உங்கள் எஜமானராக்க விரும்புகிறீர்களா? அவருடைய அதிகாரத்திற்கு அடிபணியுங்கள். எல்லா சோதனையையும் எதிர்க்கவும். தீய பழக்கத்திலிருந்து வெளியே வரவும் கடவுள் உங்களுக்கு உதவுவார். 

அன்புள்ள நண்பரே, உங்கள் இதயத்தில் கையை வைத்து கொள்ளுங்கள். இயேசு இன்று உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொண்டு வரப்போகிறார். அவர் நிச்சயமாக உங்கள் ஜெபங்களைக் கேட்டு உங்கள் வாழ்க்கையை மாற்றுவார். அவரை நம்புங்கள். நாம் ஜெபம் செய்யலாமா? 

அன்புள்ள இயேசுவே, நான் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டேன். அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. என் பழக்கத்திலிருந்து வெளியே வர எனக்கு உதவுங்கள். நான் கடந்த காலத்தில் தவறான தேர்வுகளை செய்துள்ளேன். தயவுசெய்து உங்கள் இரத்தத்தால் என்னைக் கழுவி என்னை புதிதாக ஆக்குங்கள். என் தவறான பழக்கங்களிலிருந்து என்னை விடுவிக்க உங்கள் விலைமதிப்பற்ற இரத்தத்தை சிந்தியிருக்கிறீர்கள். உங்கள் விலைமதிப்பற்ற இரத்தத்தின் சக்தியின் மூலம் என்னை விடுவித்து என்னை புதியவராக்குங்கள். வேதம் சொன்னபடி, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. எல்லா சங்கிலிகளிலிருந்தும் என்னை விடுவியுங்கள. உங்களால் எல்லாம் கூடும். 

அடிமைத்தனத்தின் சக்திகளிலிருந்து என்னை விடுவியுங்கள. கடந்த கால பாவங்களிலிருந்து என்னைக் கழுவுங்கள். அடிமைத்தனத்துக்கு வழிவகுக்கும் சோதனையிலிருந்து தப்பிக்க எனக்கு உதவுங்கள். என் எஜமானராக இருங்கள். தீய எண்ணங்களிலிருந்து விலகி இருக்க எனக்கு உதவுங்கள். 

இயேசுவே, என் வாழ்க்கையை மாற்றுங்கள். உங்கள் குழந்தையாக இருக்க எனக்கு உதவுங்கள், என் வாழ்நாள் நான் உங்களை பின்தொடரட்டும். நான் இயேசுவின் வல்லமைமிக்க பெயரில் ஜெபிக்கிறேன். ஆமென். 

அடிமைத்தனத்தை தூண்டும் காரியங்களில் இருந்து விலகி இருங்கள் 

அன்புள்ள நண்பரே, அடிமைத்தனத்தை தூண்டும் காரியங்களில் இருந்து விலகி இருங்கள். ஆபாச பத்திரிகை மற்றும் வீடியோக்களிலிருந்து விலகி இருங்கள், இது உங்களை மீண்டும் சோதனையில் சிக்க வைக்கும். சூதாட்டத்தை அனுபவிக்க உங்களை அழைக்கும் நண்பர்கள் குழுவிலிருந்து விலகி இருங்கள். நீங்கள் ஒரு நேர்மையான இதயத்துடன் இயேசுவிடம் திரும்பிச் சென்று உங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டால் அவர் மன்னிக்கத் தயாராக இருக்கிறார். எந்த நேரத்திலும் இயேசுவிடம் திரும்பிச் செல்ல தயங்க வேண்டாம். இயேசு சொன்னார், நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். உங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து கவனித்து, உங்கள் இதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் இயேசுவை உங்கள் ஆண்டவராக ஏற்று கொண்டீர்களா? நீங்கள் அடுத்தாக என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இங்கே பார்க்கலாம் =>

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம். உங்கள் ஜெப உதவிக்கு நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Comment

நீங்கள் இயேசுவை ஏற்று கொண்டீர்களா. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம்.

ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு, உங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.

       

Topics

விடுதலை தியானம் இயேசுவைப் பற்றி