Home » விடுதலை » அடிமைத்தனத்திலிருந்து » குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை

குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை


               

                    

பிரியமானவர்களே, இன்றைக்கு நீங்கள் ஒரு குடி பழக்கத்திலே கட்டப்பட்டு அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறீர்களா? நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம். இயேசு உங்கள் வாழ்க்கையை தொட விரும்புகிறார். குடி பழக்கத்திலிருந்து உங்களை விடுவிக்க ஆசையாய் இருக்கிறார். 

இந்த செய்தியின் முடிவிலே நாம் சேர்ந்து ஜெபிக்க போகிறோம். இயேசு ஒரு பெரிய தேவன். நம்மை அவர் மிகவும் அதிகமாக நேசிக்கிறார். 

ஒருவேளை நீங்கள் சொல்லலாம் நான் எவ்வளவோ முயற்சி செய்து விட்டேன். என்னுடைய அடிமைத்தனத்திலிருந்து இருந்து நான் வெளியே வரணும் என்று நான் எவ்வளவோ முறை முயன்றும் நான் தோற்றுப் போய் விட்டேன். 

எனக்கு இனிமே யாருமே உதவி செய்ய முடியாது என்ற நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டு இருக்கிறீர்களா? 

ஒருவேளை இந்த குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வருவது உங்களுக்கு முடியாத காரியமாக இருக்கலாம் ஆனால் இயேசுவால் எல்லாம் கூடும். நம்மால் முடியாத காரியங்களை அவர் செய்து முடிக்க முடியும். 

விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்:

ஒரு தகப்பன் தன்னுடைய மகனை இயேசுவின் இடத்தில் அழைத்து வந்தார் அவருடைய மகன் ஒரு பிசாசினாலே பிடிக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு கொண்டிருந்தான். அந்த பிசாசு இயேசுவை கண்ட உடனே அதிகமாக அலைக்கழித்து மகனை தரையிலே தள்ளினது. 

தகப்பன் இயேசுவை நோக்கி கேட்டார், என் மகன் சிறு வயது முதற்கொண்டே பிசாசினால் பிடிக்கப்பட்டிருக்கிறான். அநேக முறை அவனைக் கொள்ளும்படி அது தீயிலும் தண்ணீரிலும் அவனைத் தள்ளிவிட்டது. நீர் ஏதாகினும் செய்யப்படுமானால் எங்கள் மேல் மனதிறங்கி எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அந்த தகப்பன் கேட்டுக் கொண்டார்.

இது ஒரு தகப்பனுடைய ஏக்கம். தன் மகனை யாருமே சுகமாய் படுத்த முடியவில்லை. இயேசுவால் சுகப்படுத்த முடியுமா என்று ஏகத்தோடு இயேசுவின் இடத்திலே வந்து அந்த தகப்பன் அவருடைய காலிலே விழுந்து கெஞ்சினார்.

இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். – Mark 9:23 

உடனே பிள்ளையின் தகப்பன் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்.

இயேசு குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தர விரும்புகிறார்.

பிரியமானவர்களே இன்றைக்கு நீங்களும் உங்கள் வாழ்க்கையிலே இந்த குடி பழக்கத்தில் இருந்து என்னை விடுவிக்க யாருமே இல்லையே இன்று அங்கலாய்ப்போடு இருக்கிறீர்களா?

எனக்கும் ஒரு விடுதலை கிடைக்காதா. நான் எப்பொழுது ஒரு சக மனிதனைப் போல் இந்த உலகத்திலே வாழ்வேன்? எப்பொழுது இந்த குடி பழக்கத்திலிருந்து எனக்கு ஒரு விடுதலை கிடைக்கும் என்று ஏக்கத்தோடு இருக்கிறீர்களா?

இயேசு உங்களோடு கூட பேச விரும்புகிறார். இயேசு உங்களுடைய குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க விரும்புகிறார். நீங்கள் இயேசுவை நோக்கி கூப்பிடுங்க. ஆண்டவரே என்னுடைய இருதயத்தில் வாங்க; நான் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே; நீங்க என்னை இந்த குடி பழக்கத்திலிருந்து வெளியே கொண்டு வர முடியும்.

எனக்கு விடுதலை கொடுக்க முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே என்று ஆண்டவரை நோக்கி கூப்பிடுங்கள். நீங்கள் வாஞ்சையோடு கேட்டாள் இயேசு உங்கள் ஜெபத்திற்கு பதில் கொடுப்பார்.

நாம் சேர்ந்து ஜெபிப்போம். இயேசுவை நோக்கி கூப்பிடுவோம். அவர் நம்முடைய இரட்சகர் நம்முடைய ராஜா. நமக்காக சிலுவையிலே அறையப்பட்டு. நம்முடைய பாரங்களையும், நம்முடைய பாவங்களையும், நம்முடைய வேதனைகளையும், நம்முடைய அடிமைத்தனங்களையும், சுமந்தார். 

நம்மை விடுதலை ஆக்க அவர் சிலுவையிலே நமக்காக மரித்து மூன்றாவது நாள் உயிரோடு எழுந்தார். 

ஜெபிப்போம்:

சேர்ந்து ஜெபிப்போம். இந்த ஜெபத்தை நீங்கள் எங்களோடு கூட சேர்ந்து ஜெபியுங்கள் உங்களுடைய சொந்த வார்த்தையினாலே இயேசுவை நோக்கி கூப்பிடுங்கள் அவர் உங்களுக்கு பதில் கொடுப்பார்.

அன்புள்ள ஆண்டவரே நான் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன். எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன் இந்த குடி பழக்கத்திலிருந்து என்னை யாருமே வெளியே கொண்டு வர முடியல. ஆண்டவரே நான் உம்மை விசுவாசிக்கிறேன். 

நீங்கள் தான் என்னை படைத்த தேவன். தயவு செய்து இந்த அடிமைத்தனத்திலிருந்து எனக்கு ஒரு விடுதலை கொடுங்கள். குடி பழக்கம் எனை விட்டு விலகி ஓடட்டும். 

இந்த குடியை நான் வெறுக்கட்டும் ஆண்டவரே அனேக பாவங்களை செய்து இருக்கிறேன். குடித்து வெறித்து தேவையில்லாத வார்த்தைகளை பேசி இருக்கிறேன். அநேகரை துன்பப்படுத்தி இருக்கிறேன். 

எனக்கு விடுதலை கொடுக்கக் கூடிய ஒரே தேவன் நீங்க மாத்திரம் தான். தயவு செய்து என் வாழ்க்கை மாற்ற வேண்டும் என்று உங்களை அழைக்கிறேன். 

என் வாழ்க்கை மாறட்டும். நான் நம்புகிறேன் ஆண்டவரே. நான் விசுவாசிக்கிறேன். ஆண்டவரே நீங்க எனக்கு விடுதலை கொடுக்க முடியும். ஆமென்

பிரியமானவர்களே இயேசு உங்களை நேசிக்கிறார். அவர் உங்களை முற்றிலுமாக குடி பழக்கத்திலிருந்து விடுதிப்பார். அவர் பற்றிக்கொள்ளுங்கள் ஒவ்வொரு நாளும் அவரை நோக்கி கூப்பிடுங்கள் அவர் உங்களையும் நம் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்.

Leave a Comment

நீங்கள் இயேசுவை ஏற்று கொண்டீர்களா. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம்.

ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு, உங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.

       

Topics

விடுதலை தியானம் இயேசுவைப் பற்றி