Home » விடுதலை » பாவத்திலிருந்து » இயேசு என் கடந்த காலத்தை மன்னித்தார். ஆனால் என் கடந்த காலம் இன்னும் என்னைத் துரத்துகிறது

இயேசு என் கடந்த காலத்தை மன்னித்தார். ஆனால் என் கடந்த காலம் இன்னும் என்னைத் துரத்துகிறது


               

                    

You can read it in English here

நான் இயேசுவிடம் மன்னிப்பு கேட்ட பிறகும் கடந்த கால தவறுகளும், பாவத்தின் அடிமைத்தனங்களும் என்னை ஏன் துரத்துகின்றன? நான் பாவியின் ஜெபத்தை சொன்னேன், என்னை மன்னிக்கும்படி இயேசுவிடம் மனதார கேட்டேன். என் கடந்த காலத்தை இயேசு மன்னித்துவிட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் கடந்தகால பலவீனங்களை என்னால் இன்னும் சமாளிக்க முடியவில்லை. 

என் அன்பு நண்பரே, இவை இன்று உங்கள் கேள்வி என்றால் நாங்கள் தொடர்வதற்குமுன், நீங்கள் இயேசுவின் விலைமதிப்பற்ற குழந்தை என்பதை சொல்லி உங்களை ஊக்குவிக்க விரும்புகின்றோம். சோர்வடைய வேண்டாம். கடந்த கால பாவதிலிருந்து உங்களை மீட்பதற்கான விலையை இயேசு செலுத்திவிட்டார். நீங்கள் விரைவில் வென்று அதிலிருந்து வெளியே வருவீர்கள். நம் இரட்சிப்பில் இரண்டு பகுதிகள் உள்ளன. இதை விரிவாக புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

கடந்த காலத்திற்கு மன்னிப்பு 

இரட்சிப்பின் முதல் பகுதி நமது கடந்தகால வாழ்க்கைக்கு உண்மையான மன்னிப்பு கேட்பது. இந்த செயல்பாட்டின் போது, இயேசு நம் கடந்த காலத்தை மன்னிக்கிறார். இயேசு சிலுவையில் நமக்காக ஒரு பலியாக மரித்தார் என்று நம்புகிறோம், விசுவாசத்தினால் அவரிடமிருந்து மன்னிப்பைப் பெறுகிறோம். இயேசு சிலுவையில் பலியாணத்தின் மூலம், நாம் கடவுளோடு ஒப்புரவு ஆகிறோம். மன்னிப்பு கேட்பது எப்படி என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் அதை இங்கே படிக்கலாம் => இயேசு பாவங்களை மன்னிக்க விரும்புகிறார்

நம் கடந்த காலத்திலிருந்து மனந்திரும்புதல் 

நம்முடைய இரட்சிப்பின் இரண்டாம் பகுதி நம் கடந்த காலத்தின் பாவங்களில் இருந்து மனந்திரும்பி அதை என்றென்றும் விட்டுவிடுவதாகும். இந்த செயல்முறை நம் பழய பாவங்களை விட்டு விடுவது அல்லது நமது பழைய பாவ பழக்கங்களுக்கு மரிப்பது என்று அழைக்கப்படுகிறது. நம்முடைய பழைய பாவ இயல்புகளை விடுவிப்பதன் அர்த்தம் என்ன? நாம் முன்பு பொய் சொல்லியிருக்கலாம், நாம் விடமுடியாத பாவத்துக்கு அடிமையாக இருந்திருக்கலாம். நம் இருதயத்தில் ஒருவர் நமக்கு விரோதமாக செய்த கடினமான காரியத்தை சுமந்து கொண்டிருக்கலாம். மனந்திரும்புதலின் இரண்டாம் பகுதியாக, நாம் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும், பழைய பாவங்களை விட்டு புதிய மனிதனாக மாற வேண்டும். 

வேதம் சொல்கிறது, “நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம் ”. 

நம்முடைய கடந்த காலத்தை விட்டுவிட நாம் போராடுகிறோம். நம்முடைய மாம்ச ஆசை, கடவுளால் புதிதாகப் பிறந்த நம்முடைய ஆவிக்குரிய மனிதனுடன் போராடுகிறது. மாம்சம் ஆவிக்குரிய மனிதனைக் கடந்து, கடந்த கால தவறுகளுக்கு நம்மைத் தள்ளுகிறது. நல்ல செய்தி என்னவென்றால், இந்த போரில் நாம் மீண்டும் போராட வேண்டியதில்லை. பரிசுத்த ஆவியானவரை இயேசு நமக்கு வாக்குறுதி அளித்தார். அவர் ஒவ்வொரு நாளும் நம் குற்றத்தை நமக்கு உணர்த்தி, சரிசெய்து நமக்கு ஆலோசனை வழங்குவர். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவருடைய குரலைக் கேட்டு, நம்மை வழிநடத்த அவரை அனுமதிப்பதுதான். 

வேதம் சொல்கிறது, அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். எடுத்துக்காட்டாக, நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.

பரிசுத்த ஆவியானவர் எப்போதும் நமக்காக ஜெபிப்பார் என்பதை நாம் அறிவோம். ஆனால் நமது கடந்த காலத்திற்கு எதிராகப் போராடுவதற்கான உள்ளான நோக்கத்தை நம் இருதயத்தில் எவ்வாறு உருவாக்க முடியும்? இந்த கேள்விக்கு இயேசுவே பதில் அளித்தார். " நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்." 

நீங்கள் இயேசுவை நேசிக்கிறீர்களா? 

அன்புள்ள நண்பரே, இயேசுவை நேசிக்காவிட்டால் யாரும் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க முடியாது. இயேசுவை நேசிக்காமல் நம்முடைய பழய பாவங்களை வெறுத்து புதிய வாழ்வை தேடி ஓட முடியாது. இதற்கு மாற்று வழி எதுவும் இல்லை. நாம் இயேசுவை நேசித்தால், நம்முடைய கடந்த கால தவறுகளை தானாக முன்வந்து கைவிடுவோம். உண்மையில், நாம் அதை வெறுக்கத் தொடங்குவோம். பரிசுத்த ஆவியானவர் நமக்கு துணை நிற்பார். கடந்தகால பொழுதுபோக்கு இனி நம்மை கவர்ந்திழுக்காது. கடந்தகால அடிமைத்தனம் நம் இருதயத்திலிருந்து மறைந்துவிடும். 

இயேசுவை நம் முழு இருதயத்துடன், பெலத்துடன் மற்றும் ஆத்மாவுடன் நேசிக்காவிட்டால் அவரைப் பின்தொடர முடியாது. நீங்கள் உங்கள் கடந்த கால பாவத்தை தொடர்கிறீர்கள் என்றால், தயவுசெய்து உங்கள் இருதயத்தைத் ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் இயேசுவை நேசிக்கிறீர்களா? இயேசு சிலுவையில் நமக்காகச் செய்த காரியங்களுக்காக அவரை நேசிக்கிறீர்களா? சிலுவையில் நமக்காகச் செய்த காரியங்களுக்காக நாம் அவரை நேசிக்கும்போதுதான் நாம் அவரைப் பின்பற்ற முடியும். 

அன்புள்ள நண்பரே, தயவுசெய்து இன்று உங்கள் இருதயத்தை ஆராய்ந்துபாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இயேசுவிடம் வைத்திருந்த அன்பை இழந்தீர்களா? சோர்வடைய வேண்டாம். சிலுவையை தியானியுங்கள். உங்களையும் என்னையும் படைத்த கடவுள் நம் கடந்த காலத்தை மன்னிக்க சிலுவையில் தொங்கினார். அவர் ஏன் அதை செய்ய வேண்டும்? அவர் நம்மை நேசித்து, தன்னையே தியாகமாக ஒப்புக்கொடுக்கவில்லையா? இயேசுவின் ஆணி குத்திய கைகளை உங்கள் கண்கள் பார்க்கட்டும். அவருடைய இரக்கமுள்ள இருதயத்தையும், நம்மீது நிரம்பி வழியும் அன்பையும் தியானியுங்கள். இயேசுவின் அன்போடு ஒப்பிட்டுப் பார்க்க ஏதாவது இருக்கிறதா? நம்மை ஆட்கொண்டிருக்கும் நம் கடந்தகால பாவங்களை தூக்கி எறிவோம். பரிசுத்த ஆவியானவர் நமக்காக ஜெபித்து கொண்டிருக்கிறார். அவரோடு சேர்ந்து நாமும் ஜெபிப்போம்

அன்புள்ள இயேசுவே, நான் செய்ய விரும்பாததைச் செய்கிறேன். என் மாம்ச ஆசைகளுக்கு எதிராக என்னால் போராட முடியவில்லை. மீண்டும் மீண்டும் விழுந்து கொண்டே இருக்கிறேன். இயேசுவே, உங்கள் கட்டளைகளைப் பின்பற்ற நான் உங்களை நேசிக்க வேண்டும் என்று இன்று கற்றுக்கொண்டேன். இயேசுவே, என் கடந்த கால தவறுகளை மன்னிக்க நீங்கள் சிலுவையில் ஒரு பெரிய தியாகத்தை செய்துள்ளீர்கள். நீங்கள் சமாதானத்தின் இளவரசர். பூமிக்கும் வானத்திற்கும் கடவுள். பல தேவதூதர்கள் உங்கள் இடத்தில் சிலுவையில் மரிக்க தயாராக இருந்தார்கள். ஆனால் நீங்களே என் பொருட்டு இறங்கி சிலுவையில் மரித்தீர்கள். என்ன ஒரு பெரிய அன்பு! என்ன ஒரு பெரிய தியாகம் செய்தீர்கள்! என் உள்ளம் அன்பை உணரட்டும். நான் என் முழு இருதயத்தோடும் உம்மை பின்பற்றுகிறேன். எனது கடந்த கால பாவங்களை எல்லாம் தூக்கி எறிந்து விடுகிறேன். உங்கள் அற்புதமான தியாகத்திற்கு முன் அது மதிப்பற்றது. நான் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். நான் இயேசுவின் பெயரில் ஜெபிக்கிறேன்.

Leave a Comment

நீங்கள் இயேசுவை ஏற்று கொண்டீர்களா. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம்.

ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு, உங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.

       

Topics

விடுதலை தியானம் இயேசுவைப் பற்றி