Home » விடுதலை » பாவத்திலிருந்து » இயேசு நம்முடைய தவறுகளை மன்னிக்க விரும்புகிறார்

இயேசு நம்முடைய தவறுகளை மன்னிக்க விரும்புகிறார்


               

                    

You can read it in English here


நீங்கள் தற்செயலாக அல்லது வேண்டுமென்றே இந்த பக்கத்தை அடைந்துவிட்டீர்களா என்பது முக்கியமல்ல. இன்று நீங்கள் கடவுளுடன் ஒப்புரவாவது(சமரசம் செய்வது) அவருடய விருப்பம். உங்கள் பின்னணி என்ன, இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. உங்களைப் பற்றி நீங்கள் எவ்வளவு தகுதி வாய்ந்த அல்லது தகுதியற்றவராக உணர்கிறீர்கள் என்பது கூட முக்கியமல்ல. உங்கள் கடந்தகால வாழ்க்கையிலிருந்தும், நீங்கள் செய்த தவறுகளிலிருந்தும், இயேசு உங்களை மன்னிக்க விரும்புகிறார். அவர் உங்களை நேசிக்கிறார். நீங்கள் அவருடைய மிக அருமையான குழந்தை மற்றும் ஒரு பொக்கிஷமான படைப்பு. நீங்கள் சந்திக்கும் புயலையும் உங்கள் வாழ்க்கையில் உள்ள சிக்கல்களையும் இயேசு அறிந்திருக்கிறார். அவர் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியினாள் நிரப்ப விரும்புகிறார். அவர் நம் பாரங்களையும் துக்கங்களையும் சிலுவையில் சுமந்து மரித்தார். அன்புள்ள நண்பரே, இயேசுவின் சமூகத்தில் உங்கள் கடந்தகால பாவவாழ்க்கையை விட்டுவிட நீங்கள் தயாரா? அவருடைய கரங்கள் உங்களை நோக்கி நீட்டப்பட்டிருக்கின்றன, அவருடைய காதுகள் இப்போது உங்கள் ஜெபங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. மன்னிப்பு கேட்டு இன்று அவரை நோக்கி ஓட நீங்கள் தயாரா?

இயேசு தம் இரத்தத்தை சிலுவையில் சிந்தி நம்முடைய தவறுகளுக்கு விலை கொடுத்தார். பைபிள் சொல்கிறது முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். இயேசு சிலுவையில் செய்த தியாகத்தின் மூலம் மன்னிக்க முடியாத இருண்ட மற்றும் அழுக்கான எந்த தவறும் இல்லை. நம்முடைய எல்லா ரகசிய தவறுகளையும், பழக்கங்களையும் நாம் இயேசுவிடம் கொண்டு வர முடியும். வேதம் சொல்கிறது உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். கடந்த கால தவறுகளை எல்லாம் மாற்றி, இப்போது நம்முடைய இருதயத்தை பனியைப் போல வெண்மையாக சுத்தம் செய்ய இயேசு விரும்புகிறார்.

நம் வாழ்வின் அனைத்து கட்டுப்பாடற்ற தவறான ஆசைகளிலிருந்து நம்மை விடுவிக்க இயேசு விரும்புகிறார். வேதம் சொல்கிறது, அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது.

என் அன்பு நண்பரே, நீங்கள் இப்போதே ஒரு முடிவு எடுத்து அவருடைய மன்னிப்பைப் பெறுவீர்களா? உங்கள் இருதயத்தில் அவரை அழைப்பதன் மூலம் அவருடன் சமாதானம் செய்ய நீங்கள் தயாரா? உங்கள் கடந்த கால தவறுகளை கிறிஸ்துவிடம் ஒப்புக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை மாற்றப்பட வேண்டும் என்று அவரிடம் சொல்லுங்கள். உங்கள் எல்லா பாவங்களையும் இயேசு நிச்சயமாக மன்னிப்பார். அவர் உங்கள் கடந்த கால தவறுகளை மன்னிப்பது மட்டுமல்லாமல், அதையும் மறந்தும் விடுகிறார். பல வருடங்களுக்கு முன்பு நீங்கள் அவருக்கு எதிராக செய்திருக்கக்கூடிய தவறான விஷயங்களை உங்கள் நண்பர் நினைவில் வைத்திருக்கலாம். ஆனால் கடவுள் ஒரு முறை நம் தவறுகளை மன்னித்தால், அவர் அதை மறந்து விடுகிறார்.

நீங்கள் இப்போது இயேசுவின் கரங்களை நோக்கி ஓடத் தயாரா? இயேசு கிறிஸ்துவின் வலிமைமிக்க கைகளிலிருந்து உங்களை யாரும் திருட முடியாது. ஒரு தந்தை தனது சொந்தக் குழந்தையைப் பாதுகாப்பதைப் போல அவர் உங்களைப் பாதுகாப்பார். அவர் உங்களை வழிநடத்தி,  உங்கள் வழிகளைக் கற்பிப்பார். இது உங்கள் நாள். தயவுசெய்து தாமதிக்க வேண்டாம். கீழேயுள்ள ஜெபத்தைச் சொல்லி மன்னிப்பு கேட்கிறீர்களா? உங்கள் கைகளை உங்கள் இருதயத்தில் வைத்து இயேசுவிடம் ஜெபியுங்கள். இயேசு தனது ஆணி பாய்ந்த கைகளை உங்கள் கைகளின் மேல் வைக்கட்டும். நாங்கள் உங்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்கிறோம். தயவுசெய்து கீழேயுள்ள ஜெபத்தை உங்கள் சொந்த வார்த்தைகளால் ஜெபிக்கவும்.

அன்புள்ள கடவுளே, நான் மிகவும் வருந்துகிறேன். நான் என் வாழ்க்கையில் பல விஷயங்களை தவறாக செய்திருக்கிறேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். அவற்றை மீண்டும் செய்ய நான் விரும்பவில்லை. உங்களது விலைமதிப்பற்ற இரத்தத்தால் என்னைக் கழுவுங்கள். உங்களின் அன்பிற்கு நன்றி. நீங்கள் வானங்களுக்கும் பூமிக்கும் கடவுள். ஆனால் என் தவறுகளுக்காக நீங்கள் சிலுவையில் இறக்க இறங்கினீர்கள். எனக்காக நீங்கள் செய்த அனைத்து தியாகங்களுக்கும் நன்றி. இயேசுவே, என் இருதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நான் உங்களை நேசிக்கிறேன். இப்போது என்னை சுத்தமாக்குங்கள். சில தவறுகளை நான் மீண்டும் மீண்டும் செய்கிறேன். அதிலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை. உங்கள் சக்தியால் என்னை நிரப்புங்கள். முழு மனதுடனும் ஆத்மாவுடனும் உங்களைப் பின்தொடர எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். எனது வாழ்க்கையை உங்களிடம் ஒப்படைக்க விரும்புகிறேன். விசுவாசத்தினால் உங்கள் கையிலிருந்து நான் இரட்சிப்பையும் மன்னிப்பையும் பெற்று கொள்கிறேன். பாவத்தின் குழியிலிருந்து என்னை மீட்டுக்கொண்டதற்கு நன்றி. நான் இப்போது உங்கள் குழந்தை என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இயேசுவின் பெயரில், நான் ஜெபிக்கிறேன்.

நீங்கள் உங்கள் கடந்த காலத்தை ஒப்புக்கொண்டு அதிலிருந்து மனந்திரும்பியிருந்தால், இயேசு ஏற்கனவே உங்கள் கடந்த காலத்தை மன்னித்துவிட்டார். பைபிள் கூறுகிறது, "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." அன்புள்ள நண்பரே, கவலைப்படாதே. அவர் உங்கள் கைகளைப் பிடித்து உங்களை வழிநடத்துவார். ஒவ்வொரு நாளும் அவரைத் தேடுங்கள், அவருடைய கைகளைப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இயேசுவை உங்கள் இதயத்திற்குள் அழைத்தீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களை விட, இயேசு இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார், உங்கள் முடிவில் பரலோகம் மகிழ்ச்சி அடைகிறது. 

 

நீங்கள் இயேசுவை உங்கள் ஆண்டவராக ஏற்று கொண்டீர்களா? நீங்கள் அடுத்தாக என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இங்கே பார்க்கலாம் =>

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம். உங்கள் ஜெப உதவிக்கு நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Comment

நீங்கள் இயேசுவை ஏற்று கொண்டீர்களா. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம்.

ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு, உங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.

       

Topics

விடுதலை தியானம் இயேசுவைப் பற்றி