Home » விடுதலை » மன அழுத்தத்திலிருந்து » எலியாவின் மன அழுத்தத்தை கடவுள் எவ்வாறு கையாண்டார் How God dealt with Elijah’s depression?

எலியாவின் மன அழுத்தத்தை கடவுள் எவ்வாறு கையாண்டார் How God dealt with Elijah’s depression?


               

                    

You can read it in English here

எலியா வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல - பைபிள்

அன்புள்ள நண்பரே, நீங்கள் ஒரு மனச்சோர்வை தற்போது சந்தித்து கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் தனிமையில் அமர்ந்து கடவுளின் உதவியைக் கேட்கிறீர்களா? நீங்கள் தனியாக இல்லை. சில பெரிய தேவனுடைய மனிதர்கள் கூட தனிமைக்குத் தள்ளப்பட்டபோது அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளானார்கள். அத்தகைய ஒரு மனிதர் தான் எலியா. அவர் பல ஆண்டுகளாக தனிமையான வாழ்க்கை வாழ்ந்தார். அவர் மன அழுத்தத்தில் தள்ள பட்ட பொது ஆண்டவர் அவரை அதிலிருந்து அற்புதமாக தூக்கி எடுத்தார். அதே கடவுள் இன்று உயிருடன் இருக்கிறார். அவர் நம்மோடு கூட இருக்கிறார். அவர் உங்கள் மன அழுத்ததிலிருந்து உங்களை குணமாக்க முடியும் என்பது உண்மை. 

எலியா யார்? 

ஆகாப் என்ற ராஜா இஸ்ரவேலை ஆளும்போது, ​​கடவுள் எலியா என்ற வல்லமையான தீர்க்கதரிசியை எழுப்பினார். அவருடைய பெயருக்கு பொருள் "என் கடவுள் யெகோவா" என்பதாம். எலியா தனது வாழ்நாளில் அவர் தம்முடைய பெயருக்கு ஏற்ற படி ஆண்டவருக்காக பெரிய காரியங்களை செய்தார். எலியா மரித்த பின்பு, புதிய ஏற்பாட்டில் அவருடைய பெயர் முப்பத்தொரு முறை மீண்டும் மீண்டும் வருகிறது. எலியாவும் ஏனோக்கும் மட்டுமே மரணத்திற்கு ஆளாகாமல் உயிரோடு பரலோகத்திற்கு எடுத்து செல்ல பட்டர்கள். மேலும், சிலுவையில் அறையப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இயேசு தம்முடைய நெருங்கிய சீடர்களில் மூன்று பேரை உயரமான மலைக்கு அழைத்துச் சென்றார். மோசேயும் எலியாவும் மலையின் உச்சியில் இயேசுவோடு பேசத் தோன்றினார்கள். 

எலியா ஜெபித்தபோது, ​​கடவுள் வானத்தை மூடினார், மூன்று ஆண்டுகளாக மழை நின்றது. எலியா மீண்டும் கடவுளிடம் ஜெபித்தபோது, ​​வானம் திறந்து, மழை பொழிந்தது. அவர் ஒரு சக்திவாய்ந்த தீர்க்கதரிசியாக சித்தரிக்க பட்டிருக்கிறார். 

எலியாவின் பெரிய அதிசயம் 

எலியாவின் காலத்தில், இஸ்ரவேல் தேசத்து மக்கள் ஆண்டவரை விட்டு விட்டு அந்நிய தெய்வங்களை வணங்க ஆரம்பித்தார்கள்.. மன்னர் ஆகாப் மற்றும் அவரது மனைவி ஜெசபெல் அதை ஆதரித்தனர். எலியா கார்மல் மலையில் உள்ள பாகாலின் தீர்க்கதரிசிகளை அழைத்து ஒரு சவாலைத் கொடுத்தார். இரண்டு பலிபீடங்கள் கட்டப்பட்டன, ஒன்று பாலின் தீர்க்கதரிசிகளுக்காக, மற்றொன்று எலியாவுக்காக. 

அடுத்து, அவர்கள் இரண்டு பலிபீடத்திலேயேயும் பலிகளை வைத்தார்கள். அவர்கள் இரண்டு பலிகளின் மேலும் விறகுகளை அடுக்கினார்கள். ஆனால் யாரும் நெருப்பை பற்ற வைக்க கூடாது. எலியாவின் சவாலின் படி, அந்தந்த கடவுளிடமிருந்து நெருப்பு வர வேண்டும். பாகாலின் தீர்க்கதரிசிகள் இந்த சவாலுக்கு சம்மதித்து, காலை முதல் மாலை வரை எந்த அடையாளமும் இல்லாமல் தங்கள் கடவுளை அழைத்தார். மாலை நேரத்தில், எலியா கடவுளை நோக்கி கூப்பிட்டார். “அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும்“. கடவுள் நெருப்பை அனுப்பினார், நெருப்பு பரலோகத்திலிருந்து வந்தது. அது பலிகளையும், விறகுகாலையும், அங்கிருந்த கற்களையும் எரித்து போட்டது. கடவுளின் சக்தியால் எலியா செய்ததைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். எலியாவுக்கு இது ஒரு வெற்றிகரமான நாள். கடவுள் யார் என்பதை நிரூபித்தபின் எலியா மழையை அனுப்பும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்தார். நெருப்பை அனுப்பிய ஆண்டவர் அதே நாளில் மழையையும் அனுப்பினார். நீண்ட மூன்று வருட காலத்திற்குப் பிறகு மழை பெய்தது. மழை பற்றாக்குறையால் வறட்சியில் மூழ்கி இருந்த மகிழ்ச்சி அடைந்தது. ஆனால் ஆகாபின் மனைவி யேசபேல், பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கு நடந்த காரியங்களை குறித்து வருத்த பட்டாள். எலியாவைக் கொல்ல அவள் தீர்மானித்தாள். 

எலியாவை தேற்றிய அதே ஆண்டவர், இன்று உங்களையும் தேற்ற விரும்புகிறார். "அமைதியை தேடி" என்ற ஐந்து நாள் மின்னஞ்சல் (email) பிரயாணத்திற்கு உங்களை நாங்கள் அழைக்கிறோம். இது முற்றிலும் இலவசம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் Cancel செய்து கொள்ளலாம். கீழே உள்ள இந்த Form நீங்க Fill பண்ணி Submit செய்தீர்களானால், நாங்கள் உங்களோடு கூட தொடர்பு கொள்வோம் நன்றி.

மனச்சோர்வடைந்த எலியாவுக்கு கடவுளின் தனிப்பட்ட பராமரிப்பு 

யேசபேல் அவரைக் கொல்ல முடிவு செய்ததைப் பற்றி எலியா கேள்விப்பட்டபோது, ​​அவர் உயிருக்கு தப்பி ஓடினார். அவர் தெற்கே பயணிக்கும் தனிமையான வனப்பகுதிக்குச் சென்றார். முழு தேசத்திற்கும் முன்பாக இரண்டு பெரிய அற்புதங்களைச் செய்த மனிதர் பயந்து, மனச்சோர்வடைந்து, ஓடினார். அவர் ஒரு புதருக்கு அடியில் அமர்ந்து கடவுளை தன்னை கொன்று விடும் படி கேட்டார். இருவது நாலு மணி நேரத்துக்குள்ளாக எவ்வளவு பெரிய மாற்றம். நேற்று பெரிய அதிசயங்களை செய்த மனிதர். இன்று அவர் தன் உயிரை மாய்த்து கொள்ள வகை தேடுகிறார். எலியா போன்ற ஒரு பெரிய மனிதருக்கு கூட இந்த அளவு ஏற்ற இறக்கங்கள் இருக்கும் போது நம்முடைய வாழ்கையில் இவை இருப்பது சகஜம் தானே. 

ஆண்டவர் தம்முடைய தேவ தூதர்களை அனுப்பி எலியாவுக்கு உணவு கொடுத்தார். ஆனால் எலியா எந்த வழியில் செல்ல வேண்டும் என்று கேட்காமல் சாப்பிட்டு மீண்டும் ஓட ஆரம்பித்தார். ஆண்டவர் சொன்னதை அப்படியே கேட்டு நடந்த எலியா இப்பொது அதையே ஆண்டவர் என்ன சொல்ல விருப்பிகிறார் என்பதை கேட்காமல் சினாய் மலை வரை ஓடினார். எந்த மலையில் தான் மோசே பத்து கட்டளைகளைப் பெற்றார். அச்சத்தால் உந்தப்பட்ட எலியா இப்போது சமாரியாவிலிருந்து சினாய் மலை வரை கிட்டத்தட்ட ஆயிரம் கிலோமீட்டர்கள் ஓடியிருக்கிறார். 

கடவுள் எலியாவுக்கு புதிய நோக்கத்தைக் கொடுத்தார்.

சினாய் மலையில் எலியாவைச் சந்திக்க கடவுள் வந்தார். கடவுள் எலியாவுக்கு புதிய நோக்கத்தைக் கொடுத்தார். அவர் மென்மையான வார்த்தைகளினால் பேசினார். கடவுள் எலியாவிடம் கேட்ட முதல் கேள்வி நம்மில் பெரும்பாலோருக்கு பொருந்தும் ஒரு கேள்வி . கடவுள் எலியாவிடம், "நீ இங்கே என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். எலியா இருக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்த்த இடம் அதுவல்ல. பயத்தினால் உந்தப்பட்ட எலியா தவறான திசையில் ஓடினார்.

அன்புள்ள நண்பரே, நீங்கள் பயத்தினால் உந்தப்பட்டு, கடவுளிடம் ஆலோசிக்காமல் உங்கள் வாழ்க்கையிலிருந்து ஓடுகிறீர்களா? இயேசு இன்று உங்களுடன் பேச விரும்புகிறார். அவர் எலியாவைப் போலவே உங்களுக்கு உதவவும் வழிகாட்டவும் விரும்புகிறார். கடவுள் எலியாவுக்கு தனது வாழ்க்கையில் ஒரு புதிய நோக்கத்தைக் கொடுத்தார். எலிசாவை தனது வாரிசாக அபிஷேகம் செய்யும்படி எலியாவிடம் கேட்டார், 

ஆராம் என்னும் மன்னரை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யும் படி ஆண்டவர் எலியாவுடன் சொன்னார். 

இதைச் செய்ய, எலியா தான் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பிச் செல்ல வேண்டும். அதாவது வடக்கு திசையில் மேலும் ஆயிரம் கிலோமீட்டர் செல்ல வேண்டும். மனச்சோர்வடைந்த இந்த தீர்க்கதரிசியை கடவுள் எவ்வாறு கையாண்டார் என்பதை அறிந்து புரிந்துகொள்வது மிக முக்கியமானது. அன்புள்ள நண்பரே, எலியாவைக் கவனித்த கடவுளும் நம்மையும் கவனித்துக்கொள்வார்.

கடவுள் பட்சபாதம் செய்கிற தேவன் அல்ல. எலியாவுக்கு உதவியவர் இப்போது உங்களுடன் இருக்கிறார். தயவுசெய்து உங்கள் வாழ்க்கையில் வரும்படி அவரிடம் கேளுங்கள். அவர் உங்கள் இதயத்தில் உள்ள காயங்களை குணப்படுத்தி உங்களை ஆறுதல்படுத்த முடியும். இப்போதே நாம் இயேசுவிடம் ஜெபிப்போமா? மனச்சோர்வு மற்றும் வலிக்கும் எண்ணங்களிலிருந்து உங்களை விடுவிக்க இயேசு விரும்புகிறார். 

அன்புள்ள இயேசுவே, எலியா தீர்க்கதரிசியை நினைவூட்டியதற்கு நன்றி. என் வாழ்க்கையில் எனக்கு உதவி தேவை. கடந்த காலத்தில் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் தயவுசெய்து என்னை மன்னிக்கவும். நான் குணமடைய விரும்புகிறேன். தயவுசெய்து உங்கள் அன்பில் என்னை நிரப்புங்கள். புண்பற்றும் நினைவுகளை அகற்றி போடுங்கள். என்னிடம் பேசுங்கள். நான் உங்கள் கைகளைப் பிடித்து உங்களுடன் நடக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு புதிய நோக்கம் கொடுத்து என் வாழ்க்கையை புதுப்பிக்கவும். எனது எதிர்மறை எண்ணங்களுக்கு (negative thoughts) எதிராக வெற்றிபெற விரும்புகிறேன். என் கடவுளாக இருங்கள். என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருங்கள். இயேசுவின் பெயரில், ஆமென். 

நீங்கள் இயேசுவை ஏற்று கொண்டீர்களா. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம்.

ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு, உங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.

       

Topics

விடுதலை தியானம் இயேசுவைப் பற்றி