Home » விடுதலை » உறவு சிக்கலிலிருந்து » உங்கள் உறவை குணப்படுத்த இயேசு விரும்புகிறார் Jesus wants to Heal your relationship

உங்கள் உறவை குணப்படுத்த இயேசு விரும்புகிறார் Jesus wants to Heal your relationship


               

                    

You can read it in English here

அன்புள்ள நண்பரே, உங்கள் திருமணவாழ்கையில் உள்ள குழப்பங்களை நினைத்து உங்கள் இருதயம் கலங்குகிறதா? நீங்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் புயலிலிருந்து அமைதியைத் தேடுகிறீர்களா? உங்கள் உறவில் இயேசுவால் சமாதானத்தை கொடுக்க முடியும். தயவுசெய்து உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண அவரை அனுமதிக்கவும். நீங்கள் இப்போது எங்கிருந்தாலும் சரி உங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, உங்கள் பிரச்சினைகளை இயேசுவின் பாதத்தில் வையுங்கள். இயேசுவோடு ஒப்புரவாகுங்கள்.

அன்புள்ள நண்பரே, உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் கொஞ்சம் உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள் . உங்கள் உறவில் உள்ள சிக்கலுக்கு நீங்களே காரணமாக இருக்கலாம். தினசரி நீங்கள் பயன்படுத்தும் உங்கள் அணுகுமுறை அல்லது நீங்கள் பயன்படுத்தும் சொற்களாக கூட இருக்கலாம்.

*நீங்கள் உங்கள் இருதயத்தைத் திறந்து, உங்களை குற்றவாளியாக்க அனுமதிக்கும்போது கடவுள் அதை வெளிப்படுத்த முடியும். உங்கள் வாழ்க்கை துணைக்கு எதிராக நீங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால், அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.

என்னென்ன தவறுகளை குறித்து கடவுளால் உணர்த்தப்படுகிறீர்களோ, அது என்ன தவறாக இருந்தாலும், தயவுசெய்து உடனடியாக இயேசுவிடம் மன்னிப்பு கேளுங்கள். நீங்கள் அந்த தவறுக்காக எவ்வளவு வருத்தப்படுகிறீர்கள் என்று கடவுளிடம் சொல்லுங்கள். உங்களிலுள்ள குறைகளை மாற்ற கடவுளை அனுமதியுங்கள். இயேசு உங்கள் இருதயத்தை வடிவமைத்து, உங்கள் திருமண பந்ததை பாழாக்குகிற கூர்மையான பிரச்சனைகளை சரிசெய்யமுடியும். தயவுசெய்து கீழேயுள்ள ஜெபத்தை உங்கள் சொந்த வார்த்தைகளில் ஜெபித்து மன்னிப்பு கேளுங்கள்.

அன்புள்ள இயேசுவே, என் குற்றதை எனக்கு உணர்த்தியதற்காக நன்றி. நான் என் இருதயத்தைத் தாழ்த்தி உங்களிடம் வருகிறேன். நான் செய்த தவறுகளுக்காக வருந்துகிறேன். தயவு செய்து என்னை மன்னியுங்கள். நான் என் வாழ்க்கையில் தவறான முடிவுகளை எடுத்துள்ளேன். தவறான சொற்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். தயவுசெய்து என்னை கழுவி தூய்மைப்படுத்துங்கள். என் இருதயத்தையும் தூய்மைப்படுத்துங்கள். இந்த தவறை மீண்டும் செய்யாமல் இருக்க எனக்கு உதவுங்கள். என் வாழ்க்கையை பாதையை மாற்றி என் தவறுகளை சரி செய்ய உதவுங்கள். என்னை மன்னித்தமைகு நன்றி. தயவுசெய்து எங்கள் குடும்பத்திற்கு சமாதானம் தாருங்கள். இயேசுவின் பெயரில், நான் ஜெபிக்கிறேன்.

இயேசு இன்றைக்கு உங்களுடைய இருதயத்தை சமாதானத்தினால் நிறைக்க விரும்புகிறார். "அமைதியை தேடி" என்ற ஐந்து நாள் மின்னஞ்சல் (email) பிரயாணத்திற்கு உங்களை நாங்கள் அழைக்கிறோம். இது முற்றிலும் இலவசம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் Cancel செய்து கொள்ளலாம். கீழே உள்ள இந்த Form நீங்க Fill பண்ணி Submit செய்தீர்களானால், நாங்கள் உங்களோடு கூட தொடர்பு கொள்வோம் நன்றி.

குடும்ப ஜெபம்

அன்புள்ள நண்பரே, குடும்ப ஜெபம் பண்ணும் பழக்கம் உங்களுக்கு இல்லையென்றால், உடனடியாக அதைத் தொடங்கவும். குடும்ப ஜெபம் உங்கள் எதிரிகளிடமிருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் தடுப்பு சுவர். காலையிலோ அல்லது மாலையிலோ, உங்கள் குடும்பத்தினரை ஜெப நேரத்திற்கு ஒன்று திரட்டுங்கள். பைபிள் வசனத்தின் ஒரு சிறு பகுதியை நீங்கள் படித்து ஜெபிக்க ஆரம்பிக்கலாம். ஆரம்பத்தில் ஐந்து நிமிட ஜெபத்துடன் தொடங்கலாம், கர்த்தர் உங்களை வழிநடத்துகையில் மெதுவாக ஜெப நேரத்தை விரிவுபடுத்தலாம். ஒவ்வொரு நாளும் உங்கள் குடும்பத்தை ஜெபத்தால் மூடி மறைத்துக்கொள்ளுங்கள். கடவுளுடைய பாதுகாப்பு உங்கள் குடும்பத்தை சூழ்ந்திருக்கட்டும். ஒவ்வொரு மணி துளியும் உங்கள் குடும்பத்தின் மத்தியில் கடவுளின் ஆவி நகரட்டும்.

உங்கள் திருமணவாழ்கையில் பரிசுத்ததை கடை பிடித்தல்

பைபிள் கூறுகிறது, எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே. நாம் எப்போதும் சுதந்திரமானவர்கள் என்று நினைக்கிறோம். ஆனால் பல காரியங்கள் நம்மை அடிமைப்படுத்த முயற்சிக்கின்றன. மோசமான (Adult rated) திரைப்படத்தைப் பார்ப்பது தவறல்ல என்று நாம் நினைக்கலாம். கணவன்-மனைவி ஒன்றாக சேர்ந்துதானே பார்க்கிறோம் என்று கூட சொல்லலாம். ஆனால் தயவுசெய்து எப்போதும் கவனமாக இருங்கள். நம்மை நுட்பமாக அடிமைப்படுத்த சாத்தான் கர்ஜிக்கும் சிங்கம் போல சுற்றி வருகிறான். இயேசு சொன்னார், யாரும் இரண்டு எஜமானர்களுக்கு சேவை செய்ய முடியாது. அவன் ஒருவனுக்கு ஊழியம் செய்து மற்றவனை வெறுப்பான். இயேசு நம்முடைய எஜமானராக இருந்தால், தூய்மையற்ற விஷயங்கள் எதுவும் நம் வாழ்க்கையில் நுழைய முடியாது. உங்கள் திருமண வாழ்கையை புனிதமாக வைத்திருங்கள். பரிசுத்தமில்லாத எதையும் விட்டு விலகி இருங்கள். உங்கள் கண்கள், வார்த்தைகள், காதுகள் மற்றும் எண்ணங்களை சுத்தமாக வைத்திருங்கள்.

அன்புள்ள நண்பரே, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதற்காவது அடிமை பட்டு இருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ரகசிய பாவங்கள் உண்டா? இதைப் பற்றி யாருக்கும் தெரியாது என்று நீங்கள் நினைக்கலாம். அது நன்கு மறைக்கப்பட்ட ரகசியமாக இருக்கலாம். ஆனால் அது ஆசீர்வாதத்தை தரும் கடவுளுக்கும் தெரியும், சாபத்தை கொண்டுவரும் சாத்தானுக்கும் தெரியும். இயேசுவால் இன்று உங்களை குணமாக்கி, அடிமைத்தனம் மற்றும் ரகசிய பாவங்களிலிருந்து வெளியே வர உங்களுக்கு உதவ முடியும். அவரால் அடிமைத்தனத்தின் சங்கிலிகளை உடைக்க முடியும். தயவுசெய்து அவரை அழைத்து, அவரை உங்கள் வாழ்க்கையின் எஜமானராக வைத்துக்கொள்ளுங்கள்.

அன்புள்ள நண்பரே, உங்கள் திருமண வாழ்க்கையை சரிசெய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் எந்த சூழ்நிலையில் வழியாக போய்க்கொண்டிருந்தாலும் உங்கள் திருமண வாழ்கையை இயேசுவால் சரி செய்ய முடியும். அவரால் உங்களையும் உங்கள் வாழ்க்கைத்துணையையும் சரிசெய்ய முடியும். உங்கள் திருமண உறவை முறிப்பது (Divorce) பற்றி யோசிக்க வேண்டாம். நீங்கள் இப்போது உங்கள் குடும்பத்தினரைக் கூட்டி ஜெபம் செய்யத் தொடங்குவீர்களா?

தயவுசெய்து உங்கள் தலையில் கைகளை வைத்து இயேசுவிடம் ஜெபிக்க ஆரம்பியுங்கள். இயேசு தம் கைகளை உங்கள் கைகளின் மேல் வைக்கட்டும். கீழேயுள்ள ஜெபத்தை நீங்கள் ஜெபிக்கும்போது அவருடைய சமாதானம் உங்கள் இருதயத்தை நிரப்பட்டும். கடவுளின் பிரசன்னம் உங்கள் இதயத்தை நிரப்பட்டும். எங்களுடன் சேர்ந்து ஜெபியுங்கள்.


அன்புள்ள இயேசுவே. நான் உங்கள் பிரசன்னத்தில் வருகிறேன். தயவுசெய்து என் திருமண வாழ்க்கையை சரிசெய்யுங்கள். நான் தவறு செய்திருக்கிறேன், என் மனைவி/கணவன் செய்த தவறை நான் மன்னிக்க விரும்புகிறேன். தயவுசெய்து என் தவறுகளை ஒத்துக்கொண்டு, என்னை சரிசெய்ய எனக்கு பெலம் கொடுங்கள். எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு நாளும் உங்கள் பிரசன்னத்தை நான் உணர விரும்புகிறேன். தயவுசெய்து எங்கள் வீட்டிற்கு வந்து எங்கள் வீட்டை உங்கள் அமைதியினாலும் மகிழ்ச்சியினாலும் நிரப்புங்கள். நான் இயேசுவின் பெயரில் ஜெபிக்கிறேன், ஆமென்.

அன்புள்ள நண்பரே, உங்களை தனது சொந்த குழந்தையாக மாற்ற இயேசு விரும்புகிறார். உங்கள் கடந்தகால வாழ்க்கைகாக மன்னிப்பு கேளுங்கள். இயேசு உங்களை மன்னிப்பார். அவர் உங்கள் வாழ்க்கையை புதுப்பித்து, ஒரு தந்தை தனது சொந்த குழந்தையை வழிநடத்துவதைப் போல உங்களை வழிநடத்துவார். தயவுசெய்து உங்கள் இருதயத்தைத் தாழ்த்தி இயேசுவிடம் ஜெபிக்கவும்.

நீங்கள் இயேசுவை உங்கள் ஆண்டவராக ஏற்று கொண்டீர்களா? நீங்கள் அடுத்தாக என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இங்கே பார்க்கலாம் =>

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம். உங்கள் ஜெப உதவிக்கு நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட பதிவுகள்

Leave a Comment

நீங்கள் இயேசுவை ஏற்று கொண்டீர்களா. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம்.

ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு, உங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.

       

Topics

விடுதலை தியானம் இயேசுவைப் பற்றி