Home » விடுதலை » கடனிலிருந்து » நீங்கள் கடன் பிரச்சினைகளிலிருந்து வெளியே வரலாம். இயேசு உங்களுக்கு உதவ விரும்புகிறார். You can come out of Debt. Jesus wants to help you.

நீங்கள் கடன் பிரச்சினைகளிலிருந்து வெளியே வரலாம். இயேசு உங்களுக்கு உதவ விரும்புகிறார். You can come out of Debt. Jesus wants to help you.


5.0

               

                    

You can read it in English here

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை – பைபிள் 

அன்பான நண்பரே, நீங்கள் மிகுந்த கடன் பிரச்சினையிலே சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் அமைதி இல்லாமல் இந்த கடன் பிரச்சனையிலிருந்து எப்பொழுது நான் வெளியே வருவேன் என்று ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறீர்களா?

உங்களுடைய வாழ்க்கையின் ஒரு அமைதிக்காக ஒரு நிம்மதிக்காக நாங்கள் உங்களுடன் சேர்ந்து ஜெபிக்க விரும்புகிறோம். இயேசு உங்களை இந்த கடன் பிரச்சனையிலிருந்து வெளியே கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். கீழே உள்ள வீடியோவைப் பார்க்கும்போது எங்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்.

நீங்கள் கடன் பிரச்சினைகள் இருந்தால் கீழே உள்ள புள்ளி விவரங்களை வாசியுங்கள். முடிவில் நாம் சேர்ந்து ஜெபிப்போம்

1. அன்பு நண்பரே, நீங்கள் ஒரு பெரிய கடன் பிரச்சினையில் இருப்பதினால் உங்கள் வாழ்க்கையில் எல்லாம் முடிந்து விட்டது என்று அர்த்தம் அல்ல. நீங்கள் இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக வெளியே வர முடியும் என்று விசுவாசியுங்கள். உங்களை படைத்த ஆண்டவர் உங்களுக்கு உதவ விரும்புகிறார். அவர் இந்த பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவிக்க மிகவும் ஆசைப்படுகிறார். உங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள். அதனால் உங்கள் கவனத்தை எப்பொழுதுமே உங்களுக்கு முன்பதாக இருக்கும் பெரிய பிரச்சினையை பார்ப்பதை தவிர்த்து, உங்கள் கண்கள் சில நிமிடங்கள் இயேசுவை நோக்கி பார்க்கட்டும். பைபிள் கூறுகிறது, “இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.“. இயேசு உங்கள் கடன் பிரச்சினையில் இருந்து உங்களை வெளியே கொண்டு வர முடியும் . அவரை நம்புங்கள்.

2. உங்கள் ஆரோக்கியத்தையும் மனதையும் கவனித்து கொள்ளுங்கள். இந்த கடினமான சூழ்நிலையை கடந்து செல்ல உங்களுக்கு நல்ல மனமும் நல்ல ஆரோக்கியமும் தேவை. ஒருவேளை பல விஷயத்தில் சில தவறான முடிவுகளை நீங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அதைக் குறித்து மறுபடியும் மறுபடியுமாக சிந்திப்பதில் பிரயோஜனம் இல்லை. அந்த சிந்தனைகள் உங்களை ஒரு மன நோயாளியாக மாற்றக்கூடும். ஒருவேளை நீங்கள் தவறான முடிவுகளை கடந்த காலத்தில் எடுத்திருந்தால், தயவுசெய்து அதற்காக கடவுளிடத்தில் மன்னிப்பு கேளுங்கள். ஆண்டவர் உங்களை முற்றிலுமாக மன்னிப்பார். உங்களுடைய உள்ளங்களை பரலோக அமைதியினால் நிறைப்பார். அவர் ஒரு பொழுதும் உங்கள் பழைய தவறுகளை மறுபடியும் மறுபடியும் குற்றி காண்பிக்கும் ஒரு தேவன் அல்ல.


3. சிலரை கடன் காரர்கள் துரத்தக்கூடும். மற்றும் சிலரை, அவமானப்படுத்த மோசமான வார்த்தைகளை கடன் காரர்கள் உபயோகிக்கக்கூடும். ஆனால் நம்பிக்கையை இழக்காதீர்கள். உங்கள் இருதயத்தை கடவுளுக்கு முன்பாகத் தாழ்த்தி, அவருடைய முகத்தைத் தேடுங்கள். வெள்ளம் போல பிரச்சினைகள் உங்களுக்கு வந்தாலும், ஆண்டவர் உங்களை வழிநடத்துவார். கடவுள் உங்களை தனது சிறகுகளின் கீழ் மறைப்பார். அவர் உங்களைப் பாதுகாத்து வழிநடத்துவார். எல்லாம் மிக விரைவில் மாறும். 

4. சிலர் வியாபாரத்தில் நஷ்டப்பட்டு, நொடிந்து கடன் பிரச்சினைகள் விழுவதுண்டு. சிலர் உடல் பலவீனத்தினால் தன் எல்லா பணத்தையும் இழந்து இழந்து, கடன் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வது உண்டு. நாம் எதினால் கடன் பிரச்சனையில் சிக்குகிறோம் என்று நம்முடைய ஆண்டவருக்கு தெரியும்.

ஆனால் நான் தேவையில்லாத செலவுகளை செய்து வருமானத்துக்கு மிக மிஞ்சி பொருட்களை வாங்கி கடன் பட்டிருப்போமானால் அது தவறுகளை ஒத்துக்கொண்டு, நாம் இனிமேல் ஒரு பொழுதும் அந்த தவறுகளை செய்ய மாட்டேன் என்று நாம் முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை கடவுள் உங்களுக்குக் கற்பிப்பார். அவர் உங்களை வழிநடத்துவார். 

5. நீங்கள் சிந்தியுங்கள். நீங்கள் எவ்வளவு கடன் பட்டிருக்கிறீர்கள்? யாருக்கு கடன் பட்டிருக்கிறீர்கள்? எந்த கடனிலேயே அதிகமான வட்டி என்று ஒரு பட்டியல் போடுங்கள். அதிக வட்டியுள்ள கடன் எது என்ன என்று அதிலிருந்து கண்டுபிடித்துவிடலாம். அதிக வட்டி உள்ள கடனை முடிக்க அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள். 

6. கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களிடம் உள்ள பணத்தை வைத்து உங்கள் வாழ்க்கையை கடனில்லாமல் இயக்கத் தொடங்குங்கள். எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பட்ஜெட்டுக்குள் வாழ கற்றுக்கொள்ளலாம். குறைக்கப்பட்ட பட்ஜெட்டுடன் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ கற்றுக்கொள்வோம்.

7. உங்களிடம் வேலை இல்லையென்றால், ஒரு வேலையைத் தேடுங்கள். உங்கள் கடனை அடைக்கும் வரை உங்கள் செலவுகளை குறைந்தபட்சமாக குறைக்கவும். 

8. நீங்கள் யாரிடத்தில் இருந்து கடன் வாங்கி இருக்கிறீர்களோ, அவர்கள் உங்களை துரத்திக் கொண்டிருக்கிறார்களா? கடனாளர்களிடமிருந்து வரும் துஷ்பிரயோகத்தை குறைக்க உங்களிடம் உள்ளதை விற்று அதை செலுத்த அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள். நீங்கள் நிச்சயமாக எல்லாவற்றையும் திரும்பப் பெறலாம். ஆனால் இப்பொழுது உங்களுக்கு மன நிம்மதி மிகவும் அவசியம்.  9. பணப் பிரச்சனை வரும் பொழுது தான் குடும்பத்தில் அநேக சச்சரவுகள் வருவதுண்டு. ஆனால் இது ஒரு ஒற்றுமையாக இருக்க வேண்டிய ஒரு நேரம். ஒருவரை ஒருவர் குற்றப்படுத்தவும் நேரம் இது அல்ல. கணவன் மனைவியாக ஒன்று சேர்ந்து, கரம் பிடித்து ஜெபிக்க வேண்டிய ஒரு நேரம் இது. குடும்பமாக சேர்ந்து ஜெபியுங்கள். உங்களுக்கு குழந்தைகள் இருப்பார்கள் என்றால் அவர்களையும் இந்த ஜெபத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். இயேசு நம்முடைய ஜெபங்களுக்கு பதில் தருவார்.

இயேசு சொன்னார், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். அவர் இன்று உங்கள் மத்தியில் வந்து, உங்கள் ஜெபங்களை கேட்க விரும்புகிறார். அவர் ஜெபங்களுக்கு பதில் கொடுக்கும் தேவன் 10. இந்த நேரத்திலே உங்களுக்கு ஒரு வழிகாட்டுநர் மிகவும் அவசியம் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து இயேசுவை உங்கள் எஜமானனாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
அன்புள்ள நண்பரே, இது ஒரு கடினமான நேரமாக உங்களுக்கு இருக்கலாம். ஆனால் இயேசு உங்களை நேசிக்கிறார் அவர் உங்களுடைய பரலோக தகப்பன். அல்ல உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்ற அவர் விரும்புகிறார். நாம் இப்பொழுது சேர்ந்து ஜெபிக்க போகிறோம். நீங்கள் உங்கள் வலது கரத்தை உங்கள் இருதயத்தின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த ஜெபத்தை ஜெபியுங்கள். நாங்களும் உங்களோடு சேர்ந்து ஜெபிப்போம். நம்முடைய ஆண்டவர் பதில் கொடுப்பார் என்று நம் முழு மனதோடு விசுவாசிப்போம். ஜெபிப்போம்.

அன்புள்ள இயேசுவே இந்த நேரத்தில் தாழ்மையோடு கூட உங்களுடைய சன்னிதானத்திலே நான் வருகிறேன். என்னுடைய பிரச்சினைகள் எல்லாம் உங்களுக்கு தெரியும். இந்த கடன் பிரச்சனையினால் நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன். அநேகர் என்னை ஏளனம் செய்கிறார்கள். அநேகர் என்னை மோசமான வார்த்தையினாலே துச்சமாக பேசுகிறார்கள். ஆண்டவரே நான் ஒரு வேலை தவறு செய்து இந்த கடனிலேயே சிக்கி இருந்தால், தயவு செய்து என்னை மன்னியுங்கள். என்னுடைய பழைய தவறுகளை அறிக்கை செய்ய விரும்புகிறேன். நான் ஒரு பாவி. என்னுடைய பாவங்களை மன்னியுங்கள். எனக்காக நீங்கள் சிலுவையிலே அறையப்பட்டீர்கள். உங்களுடைய பரிசுத்தமான ரதத்தினாலே என்னை கழுவி என்னை சுத்தப்படுத்துங்கள். எனக்கு உங்களுடைய உதவி தேவை. இந்த கடன் பிரச்சனையிலிருந்து எப்படியாவது நான் வெளியே வர வேண்டும், அதற்காக தயவுசெய்து ஒரு வழியை எனக்கு காண்பியுங்கள். தயவு செய்து என்னுடைய உள்ளத்தை உங்களுடைய பரலோக அமைதியினால் நிரப்புங்கள். இந்த சூழ்நிலையிலிருந்து நீங்கள் என்னை வெளியே கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன். நான் என் வாழ்க்கையை உங்களிடம் ஒப்படைக்கிறேன். தயவுசெய்து என் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துங்கள். எனது எல்லா நாட்களிலும் நான் உங்களைப் பின்தொடரட்டும். இயேசுவின் பெயரில், நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

பிரியமானவர்களே, இயேசு உங்கள் ஜெபத்தை கேட்டார். அவர் நிச்சயமாகவே அதற்கு பதில் கொடுப்பார். இயேசு உங்களை கைவிடமாட்டார். அவரிடத்தில் தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள். இயேசு உங்களுக்கே ஒரு வழியை திறப்பார் நீங்கள் இயேசுவை உங்கள் ஆண்டவராக ஏற்று கொண்டீர்களா? நீங்கள் அடுத்தாக என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இங்கே பார்க்கலாம் =>


13 thoughts on “நீங்கள் கடன் பிரச்சினைகளிலிருந்து வெளியே வரலாம். இயேசு உங்களுக்கு உதவ விரும்புகிறார். You can come out of Debt. Jesus wants to help you.”

    • Dear Sujeevan, எங்களை தொடர்பு கொண்டதற்காக நன்றி. இயேசு உங்களை நேசிக்கிறார். நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம். உங்களுடைய ஈமெயில் ஐடிக்கு தொடர்பு கொண்டிருக்கிறோம். தயவுசெய்து நீங்கள் அதை வாசித்து எங்களோடு கூட சேர்ந்து ஜெபியுங்கள்.இயேசு உங்கள் ஜெபத்துக்கு பதில் கொடுப்பார்.

      Reply
  1. Nan safana enathu husband name moorthi. Engkaluday kadan pirachinayilirunthu meendu vara japiyugkal. En husband viyaparam panraru avaru seyum tholil nastathila than pohuthu. Tholil nalla padiya vara japiyugkal

    Reply
    • Safana, உங்கள் குடும்பத்திற்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். இயேசுவின் பிரசன்னத்திற்குச் சென்று அவரிடம் பிரார்த்தனை செய்வோம். அவர் நம் ஜெபங்களுக்கு பதிலளிக்கும் கடவுள். தயவுசெய்து அவரை உங்கள் குடும்பத்திற்கு அழைக்கவும். உங்கள் வணிகத்தை ஆசீர்வதிக்கும்படி அவரிடம் கேளுங்கள். அவர் நிச்சயமாக உங்கள் வணிகத்தை ஆசீர்வதிப்பார். அவர் உங்களை அநேகருக்கு ஆசீர்வாதமாகவும் ஆக்குவார். தினமும் குடும்பமாக சேர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்.

      Reply
  2. Kadan pirachanyal en valkayae kelvi kuri agivitathu. En pavangalai ninachu nan kartharidam mandradugiren. Idhanala kadan pirachaniyil irundhu enaku mulivadhumaga viduthalai thrum karthave

    Reply
    • நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம். நீங்கள் கடினமான கடன் சூழ்நிலையை சந்திக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இயேசுவிடம் ஜெபிப்போம். அவர் நம்முடைய ஜெபங்களுக்கு பதிலளிப்பார்.

      பைபிளில் தேவன் கூறுகிறார்: வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். – மத்தேயு 11:28

      அன்புள்ள நண்பரே, நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம். ஜெபத்திற்கு இயேசு பதிலளிப்பார். தொடர்ந்து அவரைப் பிடித்துக் கொண்டு அவரிடம் ஜெபம் செய்யுங்கள். இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக.

      உன் பாரங்களை இயேசு சிலுவையில் சுமந்தார்

      Reply
  3. எனக்கு நிறைய பணத் தேவைகள் இருக்கிறது. வேலை செய்கிறேன் ஆனால் கையில் பணம் தங்க சிரமம். பண தேவையின் அடிப்படையில் நான் ஒரு நாட்டிலும் கணவர் ஒரு நாட்டிலும் இருக்கிறோம்.. உறவுகளிடம் கையேந்த மனம் வரவில்லை. நானே தேடி கொண்ட வாழ்க்கை. கடவுளை தவிர யாரையும் நம்ப முடியவில்லை. பொருளாதார ஆசிர்வாதம் அடைந்து என் கணவருடன் சந்தோசமாக வாழ என்னை ஆசீர்வதியுங்க.. நன்றி..

    Reply
    • அன்புள்ள சகோதரி வினிதா, நாங்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். இயேசு உங்கள் தேவைகளையும் உங்கள் இருதயத்தையும் அறிந்திருக்கிறார். உங்கள் கணவருடன் சேர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். இயேசு உங்கள் குடும்பத்தை உயர்த்துவார்.

      நீங்கள் கடந்த கால தவறுகளை செய்திருந்தால், உங்கள் குடும்பத்தில் இயேசுவிடம் வந்து உங்களை வழிநடத்தும்படி கேளுங்கள். அவர் உங்கள் குடும்பத்தின் உடைந்த துண்டுகள் அனைத்தையும் சரிசெய்வார். அவர் உங்களுக்காக ஆழ்ந்த அக்கறை கொண்ட உங்கள் பரலோகத் தந்தை.

      நாங்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். தயவு செய்து தொடர்ந்து இயேசுவை பற்றிக்கொள்ளுங்கள். இயேசு உங்களை ஆசீர்வதித்து உங்களை பலருக்கு ஆசீர்வதிப்பாராக. தொடர்பில் இருங்கள்.

      Reply

Leave a Comment

நீங்கள் இயேசுவை ஏற்று கொண்டீர்களா. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம்.

ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு, உங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.

       

Topics

விடுதலை தியானம் இயேசுவைப் பற்றி