அன்புள்ள நண்பரே, உங்கள் வாழ்க்கை எவ்வளவு விலைமதிப்பற்றது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சாது சுந்தர் சிங் என்று பிரபலமாக அறியப்பட்ட ஒரு இந்திய முனிவர், இயேசுவுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். அவர் இயேசுவுடனான உரையாடலை "திருவடி உபதேசம்" என்ற புத்தகத்தில் எழுதினார். ஒரு உரையாடலில், மனித வாழ்க்கையின் விலைமதிப்பற்ற தன்மையைப் பற்றி சாதுவுக்கு விளக்க இயேசு கீழ்க்கண்ட கதையைச் சொன்னார்.
ஒரு வேட்டைக்காரன், காட்டில் அலைந்து கொண்டிருந்தபோது, நீரோடையின் பின்புறத்தில் சில அழகான கற்களை கண்டான். அவற்றின் மதிப்பு தெரியாமல், ஆற்றின் அருகே உள்ள மரங்களில் அமர்ந்திருந்த பறவைகளை வேட்டையாட அவர் அந்தக் கற்களை பயன்படுத்தினார். ஆனால் அந்த கற்களோ ஒவ்வொன்றாக குறி தப்பி தண்ணீரில் விழுந்து தொலைந்து போனது. ஒரே ஒரு கல்லை மாத்திரம் கையில் எடுத்துக்கொண்டு, அவர் ஊருக்குத் திரும்பினார். அவர் சந்தையை கடக்கும்போது, ஒரு நகைக்கடைக்காரர் அந்தக் கல்லைக் கண்டு வேட்டைக்காரனிடம் சொன்னார், இது ஒரு சாதாரண கல் அல்ல, இது ஒரு விலைமதிப்பற்ற வைரம், அதற்கு இலட்சக்கணக்கான ரூபாய் கிடைக்கும். வேட்டைக்காரன் இதைக் கேட்டதும், அவன் அழுது, "அவற்றின் மதிப்பு எனக்குத் தெரியாது. பறவைகளை வேட்டையாட வெளியேர பெற்ற வைரக் கற்களை, அதன் மதிப்பு தெரியாமல் நான் பயன்படுத்தி விட்டேனே" என்றார்.
இயேசு, சாது சுந்தர் சிங்குக்கு நம் வாழ்வின் அருமையை விளக்கினார். நமக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு நாளும் வைரத்தை விட விலைமதிப்பற்றது. அந்த வைரமான விலைமதிக்க முடியாத நாட்களை நாம் உலகத்தின் ஆசைகளைத் துரத்துவதற்கு செலவழித்து விடுகிறோம். நாம் பணம், பதவிகள், மரியாதை ஆகிய காரியங்களை துரத்திக்கொண்டே இருக்கிறோம். ஆனால் அவைகளோ நம் இதயங்களை ஒருபோதும் திருப்திப்படுத்தாது. ஏமாற்றங்களை மாத்திரம் அதிகரிக்கும்.
மாறாக, விலைமதிக்க முடியாத நம் வாழ்க்கையின் நாட்களை கடவுளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு வாழலாம். அப்படி நாம் வாழ்ந்தால் பூமியில் நமது ஓட்டத்தை முடித்து சொர்க்கத்திற்குச் செல்லும்போது, இயேசு சொல்வார், "நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்;" கடவுளிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டால்தான் நம்முடைய இதயம் திருப்தி அடையும். இந்த உலகத்தின் இன்பங்கள் மற்றும் செல்வங்கள் எதுவும் நம் இதயங்களை நிறைவேற்ற முடியாது.
இயேசு இன்றைக்கு உங்களுடைய இருதயத்தை சமாதானத்தினால் நிறைக்க விரும்புகிறார். "அமைதியை தேடி" என்ற ஐந்து நாள் மின்னஞ்சல் (email) பிரயாணத்திற்கு உங்களை நாங்கள் அழைக்கிறோம். இது முற்றிலும் இலவசம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் Cancel செய்து கொள்ளலாம். கீழே உள்ள இந்த Form நீங்க Fill பண்ணி Submit செய்தீர்களானால், நாங்கள் உங்களோடு கூட தொடர்பு கொள்வோம் நன்றி.
நம் கடவுள் யார்?
இந்த உலகில் நமக்கு எந்த ஆசைகளும் இலக்குகளும் இருக்கக்கூடாது என்று இயேசு சொல்லவில்லை. ஆனால் நம் வாழ்வின் கடவுள் யார் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக, பணம் நம்முடைய கடவுளாக இருந்தால் பணத்தில் மேல் மாத்திரமே நமது மனம் நோக்கமாக இருக்கும். நம்முடைய ஜெபம் முழுவதும் அதிகம் பணத்தை எப்படி இயேசுவின் இடத்தில் இருந்து பெறுவது என்பதை குறித்து தான் இருக்கும்
ஆனால், இயேசு நம் கடவுள் என்றால், அவருடைய விருப்பத்தைத் திருப்தி செய்வதில் நாம் கவனம் செலுத்துவோம். முக்கியமான முடிவுகளை எடுக்க நாம் இயேசுவின் சன்னிதியில் சென்று காத்திருப்போம். இயேசுவின் வழிகாட்டுதலை நம்பியே நம்முடைய வாழ்க்கையின்முக்கியமான காரியங்களும் தீர்மானிக்கப்படும். அவர் நம் வாழ்வின் மையமாக இருப்பார்.
வீணான நாட்கள்
உலகின் ஆசைகளை நிறைவேற்றுவதில் வீணான நாட்கள், பறவைகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட வைரங்களுக்கு சமம். வைரங்கள் ஆற்றில் விழுந்து மறைந்ததை போல, நம் வாழ்வில் வீணான நாட்களும் கடந்த காலத்தில் மறைந்துவிடும். இழந்து போன நாட்களை நாம் மீட்க முடியாது
மோசே கடவுளிடம் இவ்வாறாக ஜெபித்தார், "நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்."
ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் பொழுது அந்த நாளை சிறந்த முறையில் பயன்படுத்துவதோ அல்லது வேட்டைக்காரன் செய்தது போல தூக்கி எறிவதோ நாம் எடுக்கும் முடிவே. ஒவ்வொரு நாளும் சூரியன் மறையும் பொழுது நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்போம். "இந்த நாளை நான் எப்படி பயன்படுத்தினேன்", என்று சிந்திப்போம். நான் சரியான முறையில் இந்த நாளை பயன்படுத்தினேனா அல்லது வீணாக்கி விட்டேனா?
உங்கள் வாழ்க்கை விலைமதிப்பற்றது
ஒரே ஒரு விலைமதிக்க முடியாத வாழ்க்கை மாத்திரமே நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து உங்கள் வாழ்க்கையில் இழந்த விஷயங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம். நம்முடைய எதிர்காலத்தை எப்படி கவனமாக செலவு செய்வது என்று கடவுளிடம் கேட்போம். அவரிடமிருந்து நமக்கு என்ன வேண்டும் என்று சொல்வதை விட, நாம் என்ன செய்ய வேண்டும் என்று கடவுளிடம் கேட்பது நல்லது. சங்கீதக்காரன் எழுதினார், "கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்"
அன்புள்ள நண்பரே, நீங்கள் இந்த காரியங்களை வாசிக்கும் பொழுது, பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் மென்மையாக பேசட்டும். கடவுளின் பார்வையில் நீங்கள் எவ்வளவு விலைமதிப்பற்றவர் என்பதை அவர் உங்களுக்கு வெளிப்படுத்தட்டும்.
நம்பிக்கை கொடுக்கிற இயேசு நம்மோடு கூட இருக்கும் பொழுது, நம்முடைய வாழ்க்கை நம்பிக்கையற்ற வாழ்க்கையாக இருக்க முடியாது. நாம் பரலோகத்தை நோக்கி நடக்கும் பொழுது நம்முடைய வாழ்க்கை துன்பத்திலும் துயரத்திலும் நிறைந்து தொலைந்து போக முடியாது. இயேசு சொன்னார், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."
உலகம் உங்களையும் என்னையும் உள்ளடக்கியது. கடந்த கால தவறுகளிலிருந்து நம்மை மீட்க கடவுள் அவருடைய ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை தியாகம் செய்தார். நாம் கடவுளுக்கு விலைமதிப்பற்றவர்களாக இல்லாவிட்டால், அவர் ஏன் நம் சார்பாக தனது மகனை இழந்து போக ஏன் அனுபவிக்க வேண்டும்? நாம் இயேசுவை நோக்கி கண்களை திருப்புவோமா? அவரிடம் மீண்டும் ஒருமுறை பேசச் சொல்வோம். தயவுசெய்து கீழே உள்ள பிரார்த்தனையை உங்கள் சொந்த வார்த்தைகளால் எங்களோடு கூட சேர்ந்து ஜெபியுங்கள். நாங்கள் உங்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்கிறோம்.
அன்புள்ள இயேசுவே, நீங்கள் ஒரு விலைமதிப்பற்ற வாழ்க்கையை எனக்கு வழங்கியுள்ளீர்கள். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒரு விலைமதிப்பற்ற வைரம். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை, என் உள்ளம் உங்களை நோக்கி பார்க்கட்டும். உலகின் கவலைகள் என்னை பல்வேறு கவலைகளுக்குள் தள்ளாமல் இருக்கட்டும். உங்கள் பெயருக்கு தகுதியான வாழ்க்கையை வாழ எனக்கு உதவுங்கள். நீங்கள் மட்டுமே என் கடவுள். என்னுடைய மீட்பர். உலகின் ஆசைகள் எதுவும் நீங்கள் என் மீது வைத்திருக்கும் பெரிய நம்பிக்கையுடன் ஒப்பிடத் தகுதியற்றவை. தயவுசெய்து எனது கடந்த காலத்தை மன்னியுங்கள். என்னை கழுவி, உங்கள் விலைமதிப்பற்ற குழந்தையாக ஆக்குங்கள். நான் உங்களை பின்தொடர விரும்புகிறேன். இயேசுவின் பெயரில், நான் பிரார்த்தனை செய்கிறேன். ஆமென்