You can read the message in English here => Will Jesus forgive my past sexual immorality?
அன்புள்ள நண்பரே, உங்கள் கடந்த கால பாலியல் தவறுகள் மன்னிக்கப்படுமா என்பதற்கான பதில்களை நீங்கள் தேடுகிறீர்களா? கடந்த காலத்தில் நீங்கள் செய்ததைப் பற்றி நீங்கள் குற்ற உணர்ச்சி அடைகிறீர்களா?
இயேசு உங்களிடம் தனிப்பட்ட முறையில் பேச விரும்புகிறார். உங்கள் இருதயத்தின் எல்லா பாரங்களையும் இறக்கி வைக்க அவர் உங்களுக்கு உதவ விரும்புகிறார்.
இயேசு எவ்வாறாக பாலியல் பாவங்களை கையாண்டார் என்று வேதத்தின் அடிப்படையில் நாம் பார்ப்போம்.
வேசித்தனத்தை இயேசு எவ்வாறு கையாண்டார்?
ஒருமுறை, சமாரியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை இயேசு சந்தித்தார். அவர் ஏற்கனவே ஐந்து தோல்வியுற்ற திருமணங்களை கடந்து வந்தவர், மேலும் திருமணத்திற்கு வெளியே ஒருவருடன் வாழ்ந்து வந்தார்.
நீண்ட பயணத்திற்குப் பிறகு இயேசு ஏற்கெனவே களைப்பாக இருந்தார். அவர் தாகமும் பசியும் கொண்டிருந்தார்.
பல ஆண்களுடன் மிகவும் சிக்கலான வாழ்க்கையைக் கொண்ட இந்த ஒரு பெண்ணுடன் பேச நேரம் ஒதுக்க இயேசு முடிவு செய்தார். அவள் தன் கணவனல்லாத வேறொருவனுடன் வேசித்தனத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள். இயேசு அவளுடைய கடந்த காலத் தவறுகளைப் பார்க்கவில்லை.
ஆனால் அவளுக்குள்ளே அழிந்து கொண்டிருக்கிற விலையேறப்பெற்ற ஆன்மாவை இயேசு பார்த்தார்.
அவர் வழங்கக்கூடிய ஜீவன் உள்ள தண்ணீரைப் பற்றி அவளிடம் பேசினார், இயேசு கொடுத்த ஜீவத்தண்ணீர்.அவளுடைய நிறைவேற்ற வாழ்க்கையை நிறைவாக்கினது.
அன்பான நண்பரே, உங்கள் வாழ்க்கை பாலியல் பாவத்தில் சிக்கித் தவிக்கிறதா? நீங்கள் அதிலிருந்து விடுதலை தேடுகிறீர்களா? இயேசு இன்று உங்களை விடுவிக்க விரும்புகிறார். உங்கள் வாழ்க்கையை பிணைக்கும் அனைத்து சங்கிலிகளையும் உடைத்து, உங்கள் கடந்த காலத்தை மன்னிக்க அவர் விரும்புகிறார். நீங்கள் இயேசுவின் பிரசன்னத்திற்கு வந்து இந்த புதிய விடுதலையைப் பெற விரும்புவீர்களா? இது இலவசம். நீங்கள் இருக்கும் இடத்திலேயே அதைப் பெறலாம்.
இயேசு கொடுத்த அதே ஜீவனளிக்கும் தண்ணீரை உங்கள் வாழ்க்கைக்கும் வழங்க இயேசு விரும்புகிறார். கடந்த காலத்தில் நீங்கள் என்ன செய்திருந்தாலும் பரவாயில்லை, இன்று இயேசு அதையெல்லாம் மன்னிக்க விரும்புகிறார். அதைப் பெற நீங்கள் தயாரா? அவர் உங்களுக்காக காத்திருக்கிறார்.
இயேசு விபச்சாரத்தை எவ்வாரு கையாண்டார்?
விபச்சாரத்தில் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட ஒரு பெண் இயேசுவின் முன் கொண்டு வரப்பட்டாள். உள்ளூர் வழக்கப்படி, கூட்டம் அவளைக் கல் எறிந்து கொல்லத் தயாராக இருந்தது. அவள் உயிருக்காக மன்றாடிக் கொண்டிருந்தாள்.
கூட்டத்தார் இயேசுவின் கருத்தைக் கேட்டார்கள். ஆகையால் அவர்கள் அவளை இயேசுவுக்கு முன்பாக இழுத்துச் சென்றார்கள். இயேசு என்ன சொல்வார் என்பதை அறிய ஒவ்வொருவரும் விரும்பினர்.
மற்றவர்கள் அவளை நியாயந்தீர்க்க உடனடியாக இருந்தபோதிலும், இயேசு அவசரப்படவில்லை. திரும்பத் திரும்ப அவரிடம் கருத்து கேட்டு கூட்டம் களைத்துப் போனது. இயேசு, “உங்களில் பாவமில்லாதவன் எவனோ அவன் முதலாவது கல்லெறியக்கடவன்” என்றார்.
அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். – யோவான் 8:9
கல்லை எரிய தகுதியுள்ளவர் இயேசுவைத் தவிர வேறு யாரும் இல்லை. அவர் பாவமற்றவர். அவர் பெண்களைப் பார்த்து, “இனி பாவம் செய்யாதே” என்றார்.
உங்கள் கேள்விக்கான பதில் இதுவாக இருக்கலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த வார்த்தைகளைச் சொன்ன இயேசு இன்றும் உயிரோடு இருக்கிறார். அவர் மாறவில்லை. இன்றும் அவர் உங்களுக்காக அதே தீர்ப்பை வழங்கலாம். போய் இனி பாவம் செய்யாதே.
உங்கள் எதிர்காலம் என்ன?
இயேசு இன்று உங்கள் கடந்த கால பாவங்களை மன்னிக்க விரும்புகிறார். ஆனால் உங்கள் எதிர்காலம் என்ன?
இயேசு சொன்னார், “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், பாவஞ்செய்கிற எவனும் பாவத்திற்கு அடிமையாயிருக்கிறான்“.
மனித அடிமைத்தனம் நீண்ட காலத்திற்கு முன்பே ஒழிக்கப்பட்டது. ஆனால் நாம் இன்னும் பாவத்திற்கு அடிமைகளாக இருக்க முடியும். பாலியல் முறைகேடு பலசாலியான ஒரு மனிதனையுங்கூட சக்தியற்ற விளையாட்டுப் பொம்மையாக்கும். தாவீதைப் போன்ற ஒரு பெரிய போர்வீரன்கூட விபச்சாரம் என்ற பாவத்திற்கு ஆளானான். வல்லமைமிக்க சிம்சோன் தெலீலாளுடன் வேசித்தனம் செய்து, எளிய இன்பத்தின் நிமித்தம் தன் வல்லமையின் எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்தினார்.
நீங்கள் தொடர்ந்து பாலியல் பாவங்களைச் செய்தால், அது உங்கள் குடும்பத்திற்கு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உங்களுக்கு நெருக்கமான அனைவருக்கும் இது ஒரு கசப்பான அனுபவமாக இருக்கும். தயவு செய்து இன்றே அதிலிருந்து வெளியே வர ஒரு நோக்கத்துடன் முடிவை எடுங்கள்.
அன்பு நண்பரே, நீங்கள் அன்பான சகோதரியா அல்லது சகோதரரா என்பது முக்கியமல்ல. பாலியல் பாவங்கள் அதிலிருந்து தப்பி ஓடாத எவரையும் தாக்கலாம். பெரிய தேவ மனிதர்களால் கூட எதிர்த்துப் போராட முடியவில்லை.
“வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.” என்று பைபிள் சொல்கிறது. I கொரிந்தியர் 6:18.
தப்பி ஓடுவதற்கான சக்தியை இயேசு உனக்குத் தருவார். அதிலிருந்து வெளியே வர அவர் உங்களுக்கு ஆவிக்குரிய பலத்தை வழங்குவார்.
ஜெபத்தில் கர்த்தரிடம் செல்வோம். அவர் உங்களை மன்னித்து உங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை கொடுக்க விரும்புகிறார்.
தயவுசெய்து உங்கள் கையை உங்கள் இதயத்தில் வைத்து இயேசுவின் நாமத்தை அழைக்கவும். கீழே உள்ள பிரார்த்தனையை எங்களுடன் சேர்ந்து உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபியுங்கள்.
தவறுகளை மீண்டும் செய்ய நீங்கள் விரும்பவில்லை என்று உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து இருந்து இயேசுவிடம் சொல்லுங்கள். உங்கள் கடந்த காலம் அனைத்திலிருந்தும் தப்பி ஓடுவதற்கான வலிமையை உங்களுக்குத் தரும்படி அவரிடம் கேளுங்கள். அவரே உங்கள் பரலோகத் தந்தை. அவர் ஜெபங்களுக்கு பதிலளிக்க விரும்புகிறார். பிரார்த்தனை செய்வோம்.
அன்புள்ள இயேசுவே, நான் (உங்கள் பெயரை இங்கே இடவும்) தாழ்மையான இருதயத்தோடு உங்களிடம் வருகிறேன். தயவுசெய்து எனக்கு உதவுங்கள். என் கடந்த காலத்தைப் பற்றி உங்களுக்கு தெரியும். தயவு செய்து என் வாழ்வில் வாருங்கள். என் கடந்த கால தவறுகளை மன்னித்தருளும். உமது விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னைக் கழுவும். நீர் எனக்குத் தந்த என் சரீரத்தைத் தீட்டுப்படுத்தினேன். நான் பயங்கரமாக பாவம் செய்தேன்.
தயவுசெய்து எனக்கு உதவுங்கள். மறுபடியும் என்னை கழுவுங்கள். நான் அதை செய்ய விரும்பவில்லை. நான் ஒரு புதிய மனிதனாக மாற விரும்புகிறேன். தயவுசெய்து எனக்கு உதவுங்கள். பாலியல் பாவங்களிலிருந்து தப்பி ஓடுவதற்கு எனக்கு ஆவிக்குரிய பெலனைத் தாரும். நீங்கள்தான் என் நம்பிக்கை. நீரே என் தேவன். நீங்கள் மட்டுமே எனக்கு உதவ முடியும். நீங்கள் மட்டுமே என் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்க முடியும்.
தயவு செய்து என் கைகளைப் பிடித்து என்னை வழிநடத்துங்கள். உமது வலிமைமிக்க சிறகுகளால் என்னை மூடியருளும். எனக்கு ஒரு புதிய இதயத்தைத் தாங்க. உங்களை நேசிக்கும் மற்றும் என் வாழ்நாள் முழுவதும் உங்களை பின்தொடரும் இதயத்தைத் தாங்க. இயேசுவின் வல்லமையான நாமத்தினாலே, நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
அன்பு நண்பரே, உமது உடல்நிலை அனுமதித்தால் தயவுசெய்து உபவாசித்து ஜெபிக்கவும். இயேசுவைப் பற்றிக்கொள்ளுங்கள். அவர் உங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை உடைப்பார். உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். இயேசு உனக்கு உதவி செய்வார். இயேசு உங்களை ஆசீர்வதித்து அநேகரை ஆசீர்வதிப்பாராக. தொடர்பில் இருங்கள்.
உங்கள் கடந்த கால வாழ்க்கைக்கு மன்னிப்பு கேளுங்கள். இயேசு உன்னை மன்னிப்பார். ஒரு தகப்பன் தன் சொந்த பிள்ளையை வழிநடத்துவதுபோல அவர் உங்கள் வாழ்க்கையை புதுப்பித்து உங்களை வழிநடத்துவார். தயவுசெய்து உங்கள் இருதயத்தைத் தாழ்த்தி இயேசுவிடம் ஜெபியுங்கள்.