Home » விடுதலை » மன அழுத்தத்திலிருந்து » பிரார்த்தனைகள் மூலம் மனச்சோர்வை மேற்கொள்வது எப்படி?

பிரார்த்தனைகள் மூலம் மனச்சோர்வை மேற்கொள்வது எப்படி?


5.0

               

                    

You can read the message in English here => How to overcome depression through prayers?

அன்புள்ள நண்பரே, இன்று நீங்கள் மனச்சோர்வை அனுபவிக்கிறீர்களா? நீங்கள் மனச்சோர்வை மேற்கொள்ள ஒரு தீர்வைத் தேட முயற்சிக்கிறீர்களா?

தேவன் இன்று உங்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறார். இயேசு உங்களை மனச்சோர்விலிருந்து குணமாக்க விரும்புகிறார். இன்று நாங்களும் உங்களோடு சேர்ந்து ஜெபிக்கப் போகிறோம். இயேசு உங்கள் மனச்சோர்வைக் குணமாக்குவார், உங்கள் இதயத்தை சமாதானத்தால் நிரப்புவார்.

உங்கள் மனச்சோர்வுக்கான காரணம் கடன், மதுபானம் போன்ற பழக்கங்களுக்கு அடிமைத்தனங்கள் அல்லது அன்புக்குரியவர்களின் இழப்பு போன்ற வாழ்க்கை நிகழ்வுகள் காரணமாக இருக்கலாம்.

நாங்கள் மருத்துவர்களோ, ஆலோசகர்களோ அல்ல. உங்களுடன் பிரார்த்தனை செய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம். உங்கள் பதிலளிக்கப்படாத எல்லா ஜெபங்களுக்கும் இயேசு பதிலளிப்பார்.

மனச்சோர்வில் இருந்து வெளியே வர நீங்கள் ஏற்கனவே பல வழிகளை முயற்சித்திருக்கலாம். உங்களில் சிலர் மருத்துவர்களை சந்தித்து ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டிருப்பீர்கள்.

அன்பு நண்பரே, ஜெபத்தில் எங்களோடு சில நிமிடங்கள் செலவிடுவீர்களா? நீங்கள் எந்த பணமும் செலுத்த வேண்டியதில்லை அல்லது எங்கும் செல்ல வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து தேவனைத் தேடுவதன் மூலம் எங்களுடன் ஜெபிப்பதுதான்.

ஜெபம் குணமாகும் மனச்சோர்வு – சாட்சியம்.

இன்று காலை ஒரு அன்பு சகோதரியிடமிருந்து எங்களுக்கு கிடைத்த சாட்சியை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அப்செசிவ்-கம்பல்ஸிவ் டிஸார்டர் (OCD) காரணமாக அவர் கடுமையான மனச்சோர்வில் இருந்தார். இதோ அவரது சாட்சியம்:

சாட்சியை எழுதிய அன்பு சகோதரி எந்தப் பணமும் கொடுக்க வேண்டியிருக்கவில்லை, அதைப் பெறுவதற்காக தூர இடத்திற்குப் போக வேண்டியிருக்கவில்லை. இயேசு அவளை விடுதி அறையிலேயே சுகப்படுத்தினார். அவள் உடனடியாக குணமடைந்தாள். அவள் மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கிறாள், அவளுடைய இயல்பு வாழ்க்கையைத் தொடர முடிகிறது. தங்கள் சூழ்நிலைகளை மேற்கொண்ட நபர்களின் இதே போன்ற பிற சாட்சியங்களை நீங்கள் படிக்க விரும்பினால், நீங்கள் “சாட்சியங்கள்” இணைப்பைப் பார்க்கலாம்.

உங்களுடைய மனச்சோர்வையும் குணமாக்க இயேசு விரும்புகிறார். கடவுள் பாரபட்சம் காட்டுவதில்லை. நாம் ஒவ்வொருவரும் அவருடைய விலையேறப்பெற்ற பிள்ளை. நம் ஒவ்வொருவரையும் மீட்க இயேசு சிலுவையில் கிரயம் செலுத்தினார். உங்கள் வாழ்க்கையை சமாதானத்தால் நிரப்ப அவர் ஆவலுடன் காத்திருக்கிறார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய நாமத்தை கூப்பிடுவது மாத்திரம் தான். அவரை உங்கள் வாழ்வில் அழையுங்கள். உங்கள் வாழ்க்கையைத் தொட்டு குணமாக்கும்படி இயேசுவிடம் கேளுங்கள்.


மனச்சோர்வுக்கான பிரார்த்தனை

இப்பொழுதே இயேசுவிடம் ஜெபிப்போம்.

தயவுசெய்து உங்கள் கையை உங்கள் இதயத்தில் வைத்து இயேசுவின் நாமத்தை அழைக்கவும். கீழே உள்ள ஜெபத்தை உங்கள் சொந்த வார்த்தைகளில் உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபியுங்கள். உங்கள் கடந்த காலத்தில் செய்த பாவங்களை நீங்கள் அறிக்கையிட வேண்டியிருந்தால், தயவுசெய்து அதைச் செய்யுங்கள். இயேசு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அன்புள்ள இயேசுவே, நான் இருக்கிறபடியே உங்களிடம் வருகிறேன். என் நிலைமை உங்களுக்கு மட்டுமே தெரியும். என் வாழ்வில் நீங்கள் தேவை. வந்து என் வாழ்க்கையைத் தொடுங்கள். நீங்கள் மட்டுமே என் நம்பிக்கை. உங்கள் மேல முழு நம்பிக்கை வச்சிருக்கேன். எனது கடந்த கால தவறுகள் அனைத்தையும் மன்னித்து விடுங்கள். தெரிந்தோ தெரியாமலோ நான் என் வாழ்க்கையில் தவறுகள் செய்துவிட்டேன். தயவு செய்து என்னை குணப்படுத்துங்கள். என் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் தொட்டு என்னை அமைதியால் நிரப்புங்கள்.

இயேசுவே, எனக்காக சிலுவையில் மரித்த தேவன் நீங்களே. உங்கள் ஆணி பாய்ந்த கைகளால் என்னைத் தொடுங்கள். என்னை ஒரு புதிய மனிதனாக மாற்றுங்கள். என் வாழ்நாள் முழுவதும் உங்களை நான் பின் பின்தொடரும் ஒரு புதிய இதயத்தை எனக்குத் தாருங்கள். தயவு செய்து என் கைகளைப் பிடித்துக் கொள்ளுங்கள். உமது பரலோக சமாதானத்தாலும் சந்தோஷத்தாலும் என்னை நிரப்புங்கள். மனச்சோர்வு என் மனதை விட்டு ஓடட்டும்.

தயவு செய்து என்னை குணப்படுத்துங்கள். திரும்பத் திரும்ப வரும் எண்ணங்கள் எல்லாம் என் உள்ளத்தில் இருந்து வெளியே ஓடட்டும். உங்கள் நாமத்தை என் வாழ்நாள் முழுவதும் மகிமைப்படுத்த விரும்புகிறேன். தயவுசெய்து எனக்கு ஒரு அதிசயம் செய்யுங்கள். என்னை உங்கள் அருமையான பிள்ளையாக ஆக்கிக் கொள்ளுங்கள். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

மேற்கண்ட பிரார்த்தனைக்கு மிக்க நன்றி. நாங்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்ய விரும்புகிறோம்.

அன்புள்ள இயேசுவே, நாங்கள் எங்கள் அன்பு நண்பருடன் சேர்ந்து ஜெபிக்கிறோம். இயேசுவே, அவர்கள் இப்போது எங்கிருந்தாலும், நீங்கள் அவர்களுடன் இருக்கிறீர்கள். “நான் உங்களை அனாதையாக விட்டு விடமாட்டேன்” என்று கூறினீர்கள். அவர்கள் தனியாக இல்லை. நீங்கள் இப்போது அவர்களுடன் இருக்கிறீர்கள். இயேசுவே, அவர்களுடைய பாரங்களையெல்லாம் சிலுவையில் சுமந்தீர்கள். அவர்கள் அதே சுமைகளை சுமக்க வேண்டியதில்லை. சிலுவையில் உங்களால் முடிக்கப்பட்ட வேலையை நாங்கள் நம்புகிறோம்.

நீங்கள் அவர்களுடைய பரலோகத் தந்தை. அவர்களின் தேவைகளை உங்களுக்கு தெரியும். இயேசுவே, தயவு செய்து அவர்களின் வாழ்க்கையைத் தொடுங்கள். காயங்களையும், அவர்கள் சுமக்கும் வலிகளையும் எடுத்து போடுங்கள். எல்லா நோய்களிலிருந்தும் அவர்களை குணப்படுத்துங்கள். அவர்களின் உடைந்த வாழ்க்கையை நீங்கள் மட்டுமே சரிசெய்ய முடியும். கடினமான சூழ்நிலையில் இருந்து அவர்களை உயர்த்த உங்களால் மட்டுமே முடியும். இயேசுவே, தயவு செய்து அவர்களின் கடந்த கால தவறுகளை மன்னித்தருளும். உமது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் அவர்களை கழுவுங்கள். நீங்கள்தான் எங்கள் நம்பிக்கை. நாங்கள் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம். இயேசுவின் வல்லமையான நாமத்தில், ஜெபிக்கிறோம். ஆமென்.

அன்பு நண்பரே, இன்று எங்களுடன் இணைந்ததற்கு மிக்க நன்றி. இயேசு உங்கள் மனச்சோர்வை குணமாக்குவார். தயவு செய்து அவர்மீது நம்பிக்கை வையுங்கள். நமது இரட்சகரை தொடர்ந்து பற்றிக்கொள்வோம். இயேசு உங்களை ஆசீர்வதித்து அநேகரை ஆசீர்வதிப்பாராக.

Leave a Comment

நீங்கள் இயேசுவை ஏற்று கொண்டீர்களா. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம்.

ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு, உங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.

       

Topics

விடுதலை தியானம் இயேசுவைப் பற்றி