Home » இயேசுவைப் பற்றி » நம்முடைய பாவங்களை இயேசு எவ்வாறு மன்னிக்க முடியும்? How Could Jesus forgive our Sins?

நம்முடைய பாவங்களை இயேசு எவ்வாறு மன்னிக்க முடியும்? How Could Jesus forgive our Sins?


               

                    

You can read it in English here

அன்புள்ள நண்பரே, ஒரு நபருக்கு அல்லது ஒரு இடத்திற்கு ஒரு பெரிய தொகையை நன்கொடையாக அளிப்பதன் மூலம் நம் வாழ்வின் பாவங்களை மன்னிக்க முடியும் என்று பலர் நம்புகிறார்கள். கெட்டதை விட அதிகமான நல்லவைகளை செய்யும் பொது, நம் வாழ்வின் பாவங்கள் மன்னிக்கபடும் என்று சிலர் நம்புகின்றனர்.

மனிதகுலத்தின் பாவங்களை மன்னிக்க தனக்கு உரிமை உண்டு என்று இயேசு கூறினார். இயேசு பாவ மன்னிப்பை இலவசமாக வழங்கினார். நம்முடைய கடந்த கால தவறுகளை இயேசு எவ்வாறு மன்னிப்பார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நாம் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ நம் வாழ்க்கையில் பல தவறுகளை செய்கிறோம். 

நாம் மற்றவர்களை காயப்படுத்துகிறோம், கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறோம், நாம் விரும்பாததைச் செய்கிறோம். நம்முடைய வாழ்க்கையை சுத்தமாக வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால் அதற்கு எதிர்மறையான காரியங்களை செய்கிறோம்.

அன்புள்ள நண்பரே, இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. இது நம் ஒவ்வொருவருக்கும் பொதுவானது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவீது ராஜா, “நான் ஒரு பாவியாகப் பிறந்தேன்-ஆம், என் தாய் என்னைக் கருத்தரித்த தருணத்திலிருந்து” என்று கதறினார். நாம் பிறக்கும்போது பாவத்தின் தன்மையை நம் மரபணுக்களில் கொண்டு வந்தோம். நாம் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் சமமான மற்றும் எதிர் விளைவுகள் உண்டு. என் பாவங்களின் விளைவுகளை சமப்படுத்த நான் எவ்வளவு "நல்லது" செய்ய வேண்டும்? எனது “கெட்டதை” சமப்படுத்த எவ்வளவு “நல்லது” போதுமானது? என் பயங்கரமான மற்றும் அசிங்கமான எண்ணங்களை கழுவ எவ்வளவு தர்மம் போதுமானது என்று நாம் ஆராய்ந்து பார்க்கிறோம். நமக்கு யார் உதவ முடியும்? 

கடவுள் - அன்பான மற்றும் நீதியான நீதிபதி 

பாவம், பாவமில்லாத கடவுளையும் பாவமுள்ள மனிதனையும் பிரித்தது. அவர் தனது சொந்த உருவத்தில் உருவாக்கிய மனிதகுலத்தின் நிலையைக் கண்டதும் கடவுளின் இதயம் உடைந்தது. அன்பான கடவுளாக, அவர் நம்முடன் நெருங்கிய உறவு கொண்டிருக்க விரும்பினார். ஆனால் அதே கடவுள் நீதியுள்ள நீதிபதியாக, மனிதகுலத்தை அவர்கள் செய்த பாவங்களுக்காக தண்டிக்கவும் செய்கிறார். கடவுளுடைய அன்பும் அவருடைய நிதியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

 நம்முடைய எல்லா தீய செய்கைகளுக்கு தண்டனை உண்டு. ஆனால் அன்பான ஆண்டவர் நம்மை தண்டிக்க விரும்பவில்லை. நம்மை தண்டிப்பதற்கு பதிலாக தன்னுடைய குமாரனை மனித சாயலாக இந்த உலகத்திற்கு அனுப்பினார். அவர் பெயர் இயேசு. இந்த மகத்தான திட்டத்தின் ஒரு பகுதியாக, நாம் செய்த தவறுகளுக்கு தனது சொந்த மகன் இயேசுவை தண்டிக்க அவர் முடிவு செய்தார். அவர் மனிதகுலத்தின் பாவங்களை இயேசு மீது வைத்து, நாம் பாவமற்றவர்களாக இருக்கும்படி தனது சொந்த மகனை தண்டித்தார். 

இயேசுவால் எவ்வாறு நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன? 

ஒரு மனிதனுடைய தண்டனையை இன்னொரு மனிதன் மாத்திரமே ஏற்று கொள்ள முடியும். எனவே இயேசு மனித சாயலில் இந்த உலகத்தில் வர வேண்டியதாயிருந்தது. கடவுளின் மகனாகிய இயேசு ஏழை பெற்றோருக்குப் பிறந்து சாதாரண வாழ்க்கை வாழ்ந்தார். அவர் தனது முப்பது வயதை எட்டியபோது, ​​தனது ஊழியத்தைத் தொடங்கினார். கடவுளின் மன்னிப்பைப் பிரசங்கித்தார், நோயுற்றவர்களைக் குணப்படுத்தினார், அனைவருக்கும் ஜெபம் செய்தார். அவருக்காக பன்னிரண்டு சீஷரை தேர்ந்தெடுத்தார். 

யோவான் இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய சீடராக இருந்தார். அவர் இயேசுவோடு மூன்று ஆண்டுகள் கழித்தார். இயேசுவோடு வாழ்ந்த அனுபவத்தை யோவான் எழுதினார்: ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. 

கடவுளின் மகனாக இயேசு ஒருபோதும் தனது அதிகாரத்தையும் சக்தியையும் காட்டவில்லை. அவர் ஒரு தாழ்மையான வாழ்க்கை வாழ்ந்தார். அவருடைய சீடர்களின் கால்களைக் கழுவினார். 

பாவமில்லாத கடவுள் நமக்காக பாவியாக ஆனார். 

பூமியில் மூன்று ஆண்டுகள் கழித்த பிறகு, இயேசு சிலுவையில் அறைய வேண்டிய நேரம் வந்தது. பாவத்தின் முழு தண்டனையும் இயேசு கிறிஸ்துவின் மீது இறங்கியது. கடவுளின் தீர்ப்பு அவருடைய சொந்த மகனின் மீது இறங்கியது. முழு உலகத்தின் பாவங்களுக்காக இயேசு பாவமுள்ள மனிதராக மாற்றப்பட்டார். பைபிள் கூறுகிறது, "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்". நம்முடைய ஆண்டவர் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார். அவரை பரலோகத்திற்கு அழைத்துச் சென்றார். 

மரித்த இயேசு இன்றும் உயிரோடு இருக்கிறார். நம்மோடு பேச விரும்புகிறார். இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் கடவுளின் மன்னிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், அவருடன் நித்திய ஜீவனுக்கு (சொர்க்கம்) உயிர்த்தெழுப்பப்படுவார்கள். பைபிள் சொல்கிறது, "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." இவ்வாறு பாவமுள்ள மனிதன் இயேசு கிறிஸ்துவின் மூலம் பாவமற்ற கடவுளுடன் இணைக்க பட்டான். மனித ஆத்மாவின் மீட்பிற்கான கடவுளின் மகத்தான திட்டத்தில் அவர் தன சொந்த மகனை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அவர் அதை நம் அனைவருக்கும் இலவசமாக வழங்கினார். மனிதகுலத்தின் பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரத்தை இயேசு கிறிஸ்து பெற்றார். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். இன்றும் உயிரோடு இருக்கிறார். அவரை நம்பவும், பின்பற்ற விரும்பும் அனைவருக்கும் அவர் மன்னிப்பை வழங்குகிறார். சிலுவை என்பது மீட்பின் அடையாளம் மற்றும் நம்பிக்கையற்றவர்களுக்கு ஒரு நம்பிக்கை. அன்புள்ள நண்பரே, நீங்கள் அந்த மீட்பை பெற விரும்புகிறீர்களா? நம்முடைய கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கலாமா? 

அன்புள்ள இயேசுவே, நீங்கள் என்னை எவ்வளவு நேசித்தீர்கள் என்று காண்பித்ததற்காக நன்றி. உங்களுடைய விலையேற பெற்ற தியாகத்துக்காக நன்றி செலுத்துகிறேன். நான் பாவமற்றவனாக இருக்க என் எல்லா தவறுகளையும் நீங்களே எடுத்துக்கொண்டீர்கள். தயவுசெய்து எனக்கு உதவுங்கள். பாவமில்லாத வாழ்க்கையை வாழ எனக்கு பலம் கொடுங்கள். நான் பாவத்தில் பிறந்தேன். என் வாழ்க்கையில் வரும் சோதனையை எதிர்க்க நான் போராடுகிறேன். இயேசுவே, தயவுசெய்து என்னைக் கழுவி என்னை சுத்தமாக்குங்கள். புனித வாழ்க்கை வாழ எனக்கு உதவுங்கள். நான் இப்போது உங்கள் குழந்தையாக இருக்க விரும்புகிறேன். எனது கடந்த கால தவறுகளை மன்னியுங்கள். நான் முழு மனதுடன் உங்களைப் பின்தொடர விரும்புகிறேன். ஒரு தாழ்மையான, நேர்மையான இதயத்துடன், எனது கடந்த கால தவறுகளை மன்னித்ததற்கு நன்றி. இயேசுவின் பெயரில், நான் ஜெபிக்கிறேன்.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் (இயேசு) காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். - Bible

Leave a Comment

நீங்கள் இயேசுவை ஏற்று கொண்டீர்களா. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம்.

ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு, உங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.

       

Topics

விடுதலை தியானம் இயேசுவைப் பற்றி