Home » இயேசுவைப் பற்றி » கிருபைக்காக செலுத்தப்பட்ட விலை The Cost of Grace

கிருபைக்காக செலுத்தப்பட்ட விலை The Cost of Grace


               

                    

You can read it in English here

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கல்வாரி மலையில் ஒரு பிற்பகலில் நடந்து கொண்டிருந்த எல்லா கேலிக்கூத்துகளிலும், ஒரு விஷயம் விசித்திரமாக இருந்தது. கேலி செய்யப்பட்டவர் “இது யூதர்களின் ராஜா” என்ற முத்திரையுடன் தொங்கிக் கொண்டிருந்த மனிதர். எல்லா அவமானங்களையும் கடந்து வந்து அவர் சிலுவையில் அறைய பட்டிருந்தார். ஆனால் அவர் அதற்கு விதிக்கப்பட்டவர் போல் அமைதியாக இருந்தார். அவர் கூக்குரலிடவில்லை, விவாதிக்க வில்லை. அவர் யார்? அவர் எதற்காக சிலுவையில் தொங்கினார் என்று பார்ப்போம்?

அவர் ஒரு தச்சரின் மகனாகப் பிறந்தார், ஆனால் அவர் உண்மையான அரச இரத்தமான தாவீது மன்னரின் வம்சாவளியில் பிறந்தவர். அவர் குழந்தையாக பிறக்கும் பொது, அவரது தந்தையையும் தாயையும் எந்த அறையும் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே அவர் மாட்டு தொழுவத்தில் பிறந்தார். எந்த காரணமும் இல்லாமல் அவரை ஏரோது மன்னர் அவருடைய உயிரை வேட்டையாடினார். பெத்லகேம் நகரில் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கொல்லப்படும் வரை வேட்டை தணிக்கப்படவில்லை. ஏரோது ராஜா இறந்து அடக்கம் செய்யப்படும் வரை அவர் காப்பாற்றப்பட எகிப்துக்கு ஓடி மறைந்து இருந்தார். அவரது ஆரம்பகால வாழ்க்கையை குறித்து சொல்ல படும் படியாக எந்த ஆவணமும் இல்லை. 

பன்னிரண்டு வயதில் பரிசேயர்கள் அவருடைய ஞானத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். பன்னிரெண்டு வயதிற்குப் பிறகு அவரது தந்தையைப் பற்றி எந்த தகவலும் இல்லை. அநேகமாக அவர் தனது தந்தையை இழந்து சிறு வயதிலேயே தனது சகோதர சகோதரிகளை பார்த்து கொள்ளும் பொறுப்பை ஏற்று கொண்டார். முப்பது வயதில் இந்த உலகத்தின் இளவரசன் (சாத்தான்) அவரை செல்வங்கள், பொய்கள் மற்றும் மகிமையால் சோதித்தார். ஆனால் அவரோ அதற்கு அடிபணிய வில்லை. அவர் தனது பொது வாழ்க்கையை சுமார் மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். அவர் நோய்வாய்ப்பட்டவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். நோய்வாய்பட்டவர்களை அற்புதமாக குணமாக்கினார். அன்பற்றவர்களை நேசித்தார், திக்கற்றவர்களை காணும் பொது அவர் உள்ளம் உருகினது . இதயம் கசிந்து அழும் மனிதரோடு அவரும் அழுதார், பசித்தவர்களுக்கு உணவளித்தார், இழந்தவர்களைத் தேடினார். 

அவர் குறைவாக தூங்கினார், அதிக பயணம் செய்தார், தாகமாக இருந்தவர்களின் ஆன்மீக தாகத்தைத் தணித்தார். அவர் சென்ற இடத்தில் எல்லாம் பெரும் கூட்டம் சேர்ந்தது. அவர்கள் அனைவருக்கும் ஒரு பதில் கிடைத்தது. அவரது கேள்விக்கோ யாரும் பதிலளிக்க முடியவில்லை. 

மக்கள் ரோமானியர்களிடம் இருந்து விடுதலை செய்ய ஒரு ராஜாவை எதிர்பார்த்தார்கள். ஏழைகள் ஒரு ஹீரோவையும், செல்வந்தர்கள் ஏரோது போன்ற ராஜாவையும், அவரிடத்தில் எதிர் பார்த்தார்கள். ஆனால் அவர் தன்னை ஒரு மேசியா என்று அழைத்தார். சிலர் அவரை ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு தீர்க்கதரிசி என்று அழைத்தனர், மற்றவர்கள் அவர் பிசாசின் தலைவர் என்றும் நினைத்தார்கள். 

சீடர்களாக அவரைப் பின்தொடர்ந்த பன்னிரண்டு பேர் இருந்தார்கள், அவர்களில் ஒருவர் அவருக்கு எதிராகத் திரும்பி முப்பது வெள்ளிக்கு அவரை காட்டி கொடுத்தான். அவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார். அவர் எந்த குற்றச்சாட்டுக்கும் வாய் திறக்கவில்லை. அவர் குற்றம் ஏதும் செய்யாதிருந்தும் ரோமா ஆளுநரால் தண்டிக்கப்பட்டார். ரோமா சேவகர்களால் அடிக்கப்பட்டு துன்புறுத்த பட்டார். ராஜ வம்சத்தில் பிறந்ததினால் அவருக்கும் முள் கிரீடம் தலையில் அடித்து பரியாசம் செய்தனர். தனது சொந்த சிலுவையை சுமந்து கொல்கொதா என்ற மலைக்கு அவர் இழுத்து செல்ல பட்டார். இறுதியாக இரண்டு திருடர்களால் சூழப்பட்ட சிலுவையில் அறையப்பட்டார். 

அந்த நாளில் எல்லோரும் அவரை பரியாசம் செய்த போது ஒரு திருடன் மாத்திரம் அவர் தெய்வம் என்று புரிந்து கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்டான். அவர் ஆட்சி செய்ய வரவில்லை, சேவை செய்ய வந்தார். அவர் மக்களை அவர்களின் பாவத்திலிருந்து காப்பாற்ற வந்தார். 

எல்லா பலத்தையும் சேகரித்து திருடன், “ஆண்டவரே, நீங்கள் உங்கள் ராஜ்யத்திற்கு வரும்போது என்னை நினைவில் வையுங்கள்” என்று அழுதார். இறக்கும் தருணத்தில், திருடனைப் பார்த்தார். வேறு யாரும் கொடுக்க முடியாத ஒன்றை அவர் கொடுத்தார். சொர்க்கத்தில் ஒரு இடம். தகுதியற்ற மற்றும் மன்னிக்க முடியாத திருடனுக்கு இது ஒரு சாதனையாக இருந்தது. இது கிருபை என்று அழைக்கப்பட்டது. அவர் தகுதியற்ற திருடனுக்கு கொடுத்த விலைமதிப்பற்ற பரிசு அந்த கிருபை. அவர் பெயர் இயேசு. 

வரலாற்றாசிரியர்கள் இயேசுவை பற்றி எழுதினர். சிலர் அவரை நம்பினர். மற்றவர்கள் அவரைப் பின்பற்றுபவர்களாக மாறினர். அவரை பின்பற்றுகிறவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர். எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவரின் பாவங்களையும் கிருபையால் மன்னிக்க ஒரு மனிதனாக இயேசு பிறந்தார். இந்த கிருபையை அவர் அனைவருக்கும் இலவசமாக கொடுக்க மிக உயர்ந்த விலையை அவர் செலுத்த வேண்டியிருந்தது. நம்முடைய பாவங்களைக் கழுவுவதற்காக அவருடைய இரத்தத்தின் மூலம் விலை கிரயம் செலுத்தப்பட்டது. அந்த விலை கிரயம் பரிசுத்தவான்களுக்கும், பாவிகளுக்கு, ஏழைகளும், செல்வந்தர்களுக்கு, உங்களுக்கும், எனகும் சேர்த்து செலுத்தப்பட்டது. 

என் அன்பான நண்பரே, இந்த விலைமதிப்பற்ற கிருபை உங்களுக்குத் தேவையா? இது இலவசம். உங்கள் கடந்த காலம் என்ன என்பது முக்கியமல்ல. இயேசு உங்களை அழைக்கிறார். உங்கள் பிரச்னைகளை இயேசுவிடம் கொண்டுவாருங்கள். உங்கள் அடிமை தனங்களையும், நோய்களையும் இயேசு ராஜாவின் முன்னிலையில் கொண்டு வாருங்கள். நீங்கள் கிருபையைத் தேடுகிறீர்களானால், இப்போதே தலையைக் குனிந்து ஜெபிப்போம்? 

அன்புள்ள கடவுளே, நான் இப்போது வரை என் வாழ்க்கையை நான் விருப்படியெல்லாம் வாழ்ந்தேன். இன்று, நான் என் வாழ்க்கையை உங்களிடம் ஒப்படைக்க விரும்புகிறேன். எனது கடினமான கடந்த காலத்திலிருந்து வெளியே வர விரும்புகிறேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். என் இதயம் செய்ய விரும்பியதை நான் செய்தேன். உங்களது விலைமதிப்பற்ற இரத்தத்தால் என்னைக் கழுவுங்கள். என்னை சுத்தமாக்குங்கள். என் வாழ்நாள் முழுவதும் உங்களைப் பின்தொடர விரும்புகிறேன். ஆண்டவரே என் வாழ்க்கையை சரி செயுங்கள். ஒவ்வொரு நாளும் என் கடவுளாக இருங்கள். இயேசுவின் பெயரில், நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

நீங்கள் இயேசுவை உங்கள் ஆண்டவராக ஏற்று கொண்டீர்களா? நீங்கள் அடுத்தாக என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இங்கே பார்க்கலாம் =>

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம். உங்கள் ஜெப உதவிக்கு நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

 

Leave a Comment

நீங்கள் இயேசுவை ஏற்று கொண்டீர்களா. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம்.

ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு, உங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.

       

Topics

விடுதலை தியானம் இயேசுவைப் பற்றி