You can read the message in English here => How to come out of debt? – Believe Him
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; – உபாகமம் 15:6
என் அன்பு நண்பரே, கர்த்தர் இந்த வாக்குறுதியை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்ற விரும்புகிறார். நீங்கள் ஆழ்ந்த கடனில் சிக்கி அதிலிருந்து வெளியே வர முயற்சிக்கிறீர்களா? கடன்காரர்களிடம் இருந்து தப்பி ஓடுகிறீர்களா?
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு அமைதியை தேடி கொண்டிருக்கலாம். நீங்கள் இந்த சூழ்நிலையில் இருந்தால், கீழே உள்ள புள்ளிகளைப் வாசிக்கவும். இந்த செய்தியின் முடிவில் நாங்கள் உங்களுடன் ஜெபிக்க விரும்புகிறோம்.
1.நீங்கள் பெரிய கடனைச் சந்தித்ததால் உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. நீங்கள் கடனில் இருந்து நீங்கள் வெளியே வர முடியும்.
உங்கள் கடன் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், இயேசு உனக்கு உதவ முடியும். அவர் உங்கள் நிலைமையை மாற்ற முடியும். அவர் உங்களுக்கு புதிய நம்பிக்கையைத் தருவார், உங்கள் வாழ்க்கையை சமாதானத்தால் நிரப்புவார். உங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள்.
இயேசுவால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. உங்கள் சூழ்நிலையைப் பார்க்காதீர்கள், உங்கள் சூழ்நிலையையும் பிரச்சினையையும் விட பெரியவரும் சக்திவாய்ந்தவருமான கடவுளைப் பாருங்கள்.
வேதாகமம் சொல்லுகிறது இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. அவரை நம்புங்கள். அவரிடம் பிரார்த்தனை செய்வோம்.
2. உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை காத்துக் கொள்ளுங்கள். இந்த கடினமான சூழ்நிலையை கடந்து செல்ல உங்களுக்கு சிந்திக்கும் மனமும், நல்ல ஆரோக்கியமான உடல் நலனும் இருந்தால் சிறந்தது.
உங்கள் கடந்த கால தவறான முடிவுகள் பற்றி தொடர்ந்து சிந்திக்க வேண்டாம். இதினால் உங்கள் மனநலம் பாதிக்கக்கூடும். நீங்கள் கடந்த காலத்தில் ஒருவேளை உங்கள் பணத்தை சூதாட்டம், களியாட்டம் என்ற தவறான முறைகளில் நீங்கள் செலவு செய்திருந்தால் அதற்காக கடவுளிடம் மன்னிப்பு கேளுங்கள். இயேசு உங்களை மன்னித்து பரலோக சமாதானத்தால் உங்கள் இருதயத்தை நிரப்புவார்.
உங்கள் கடந்த கால தவறுகளை கடவுள் ஒருபோதும் உங்களுக்கு நினைவூட்டுவதில்லை. அவர் உங்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறார். அவர் உங்களுக்கு உதவ விரும்புகிறார். தயவுசெய்து உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்து கொள்ளுங்கள். நன்றாக சாப்பிடுங்கள். உங்களை எதிர்நோக்கி இருக்கும் சவால்கள் மிக விரைவில் கடந்து போகும்.
3. உங்கள் கடன் கொடுத்தவர்கள் நீங்கள் அதை திருப்பி கொடுக்காததினால் உங்களைத் துரத்தலாம், மேலும் நீங்கள் துஷ்பிரயோகத்தையும் அவமானத்தையும் அனுபவிக்கலாம்.
ஆனால் நம்பிக்கையை இழக்காதீர்கள். தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, அவருடைய முகத்தைத் தேடுங்கள். புயல் உங்கள் தலைக்கு மேலே எழும்பினாலும், தேவன் தம்முடைய செட்டைகளின் கீழ் உங்களை மூடி, உங்களைப் பாதுகாத்து, உங்களை வழிநடத்துவார். எல்லாம் மிக விரைவில் மாறும், உங்கள் வாழ்க்கை மீண்டும் சமாதானம் உண்டாகும். தற்போதைய சூழ்நிலையிலேயே கடந்து செல்லும் பொழுது சரியான வார்த்தைகளை பேச இயேசு உங்களுக்கு ஞானமான வார்த்தைகளைக் கொடுப்பார்.
4. தவறுகளை ஏற்றுக்கொள்ளவும், அவற்றை மீண்டும் செய்யாமல் இருக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவுகள் உங்கள் கடனுக்கு காரணமா இருந்தால் அந்த தவறுகளை மறுபடியும் செய்யாமல் இருக்க ஒரு முடிவெடுங்கள்.
எதிர்காலத்திலே நீங்கள் முக்கியமான தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்பு, இயேசுவிடம் கலந்தாலோசிக்க முடிவு செய்யுங்கள். உதாரணத்துக்கு, புதிய வணிகத்தைத் தொடங்குவது, முதலீடுகள், வேலை மாற்றம் அல்லது வேறு ஏதேனும் முக்கியமான முடிவு தொடர்பானதாக இருக்கலாம்.
இயேசு நமது எதிர்காலத்தை அறிவார். சரியான தீர்மானம் எடுக்க அவர் நமக்கு வழிகாட்டுவார். எந்தவொரு நிதி முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு எப்போதும் அவரை.கலந்து ஆலோசனை செய்து முடிவெடுங்கள்.
5. உட்கார்ந்து நீங்கள் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்கள், யாருக்கு கடன்பட்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு பட்டியலைத் தயாரிக்கவும்.
பட்டியலில் எது அதிக வட்டி உள்ள கடனை அடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். அதிக வட்டி கடன்கள் விரைவாக வளர்ந்து நம் எல்லைக்கு அப்பால் செல்லக்கூடும்.
6.கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டு உங்கள் வாழ்க்கையை கடன் இல்லாமல் நடத்தத் தொடங்குங்கள்.
குறைந்த பட்ஜெட்டில் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழக் கற்றுக்கொள்ளலாம்.
7.உங்களிடம் வேலை இல்லையென்றால், வேலை தேடுங்கள். உங்கள் கடனை அடைக்கும் வரை உங்கள் செலவுகளை குறைக்கவும்.
8.கடன் கொடுத்தவர்களிடமிருந்து துஷ்பிரயோகத்தைக் குறைக்க, உங்களிடம் உள்ளதை விற்று அதை அடைக்க அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள்.
நீங்கள் எல்லாவற்றையும் திரும்ப சம்பாதிக்க முடியும். ஆனால் இப்போது உங்களுக்கு மன அமைதியும், கடனில் இருந்து விடுதலையும் தேவை.
9.ஒரு குடும்பமாக, கர்த்தரை நம்புங்கள். தேவனோடு நேரத்தை செலவிடுங்கள்,
ஒவ்வொரு நாளும் ஒரு குடும்பமாக ஒன்றாக ஜெபியுங்கள். நீங்கள் ஒரு குடும்பமாக அவருடைய பிரசன்னத்திற்காக காத்திருக்கும்போது தேவன் நிச்சயமாக உங்கள் ஜெபங்களுக்கு பதிலளிப்பார்.
10.உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கடவுளின் உதவி தேவை. உங்கள் வாழ்க்கையை கடவுளுக்கு அர்ப்பணித்து, கடவுளை உங்கள் எஜமானராக ஏற்றுக்கொள்ளுங்கள்.
அன்புள்ள நண்பரே, நீங்கள் ஒரு கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்று உணர்கிறோம். தேவன் நிச்சயமாக உங்களை உங்கள் சூழ்நிலையிலிருந்து வெளியே கொண்டு வருவார். உங்கள் முழு இருதயத்தோடும் அவரைப் பின்பற்றுங்கள்.
நாம் ஒன்றாக இணைந்து பிரார்த்தனை செய்வோம். உங்கள் இதயத்தில் உங்கள் கையை வைத்து, இயேசு உங்கள் கடன் நிலைமையை மாற்ற முடியும் என்று நம்புங்கள். அவர் உங்களை உங்கள் நிலைமையிலிருந்து விடுவிக்கப் போகிறார். பிரார்த்தனை செய்வோம். பின்வரும் ஜெபத்தை உங்கள் சொந்த வார்த்தைகளில் சொல்ல முடியுமா?
அன்புள்ள இயேசுவே, என் நிலைமையை நீங்க அறிவீர்கள். நான் ஒரு கடன் சிக்கலில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு உதவ யாரும் இல்லை. உங்களைக் கலந்தாலோசிக்காமல் நான் தவறான முடிவுகளையும் எடுத்துள்ளேன். நான் மிகவும் வருந்துகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்.
தயவு செய்து என் வாழ்வில் வந்து என் நிலைமையை சரி செய்யுங்கள். நான் உங்களை மாத்திரம் நம்புகிறேன். நீங்கள் மட்டுமே என் நிலைமையை மாற்ற முடியும், என் பிரச்சினையை தீர்க்க முடியும். கண்ணீருடன் உங்கள் முன் மன்றாடுகிறேன்.
இயேசுவே, உமது பரலோக சமாதானத்தால் என்னை நிரப்புங்கள். இந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்து என்னை வெளியே கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன். என் வாழ்க்கையை உம்மிடம் ஒப்படைக்கிறேன். தயவு செய்து என் தேவனாக இருந்து என்னை வழிநடத்துங்கள். என் வாழ்நாள் முழுவதும் உங்களைப் பின் தொடர விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே, நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
அன்பு நண்பனே, இயேசு உன்னைத் தம்முடைய சொந்த பிள்ளையாக மாற்ற விரும்புகிறார். உங்கள் கடந்த கால வாழ்க்கைக்கு மன்னிப்பு கேளுங்கள். இயேசு உன்னை மன்னிப்பார். ஒரு தகப்பன் தன் சொந்த பிள்ளையை வழிநடத்துவதுபோல அவர் உங்கள் வாழ்க்கையை புதுப்பித்து உங்களை வழிநடத்துவார். தயவுசெய்து உங்கள் இருதயத்தைத் தாழ்த்தி இயேசுவிடம் ஜெபியுங்கள். நீங்கள் எப்படி இயேசுவின் பிள்ளையாக முடியும் என்பதை அறிய விரும்பினால், நீங்கள் இங்கே வாசிக்கலாம் => இயேசு நம்முடைய தவறுகளை மன்னிக்க விரும்புகிறார்