You can read the message below in English here => Deep into debt? Your Help is a prayer away
அன்பான நண்பரே, நீங்கள் வாழ்க்கையில் நிறைய இழந்துவிட்டீர்கள் என்று கவலைப்படுகிறீர்களா? நீங்கள் எங்கிருக்கிறீர்கள், உங்கள் பின்னணி என்ன என்பது முக்கியமல்ல. உங்கள் கடினமான காலங்களில் இயேசு உங்களுக்கு உதவ விரும்புகிறார். அவரே உங்கள் பரலோகத் தந்தை. நீங்கள் எங்கு இந்த செய்தியை வாசிக்கிறீர்களோ அங்கெ அவர் உங்களோடு இருக்கிறார்.
இந்த செய்தியின் முடிவில், நாங்கள் உங்களுடன் ஜெபிக்க விரும்புகிறோம். கடவுள் உங்களுக்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம். உங்கள் தற்போதைய நிலைமைக்கு அப்பாற்பட்ட ஒரு சிறந்த திட்டம். அவர் உங்கள் வேதனையை நீக்கிப்போட்டு, வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தை உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறார்.
இயேசுவால் முடியாதது எதுவுமில்லை. ஆனால் கடவுள் நமக்கு உதவ வேண்டும் என்றால், நாம் இயேசுவுடன் நமது உறவை சரிசெய்ய வேண்டும். அவர் நம்முடைய ஜெபங்களைக் கேட்டு நமக்கு பதிலளிக்க வேண்டும் என்றால், இயேசுவுக்கும் நமக்கும் இடையில் எந்த பிரிவினையும் இருக்கக்கூடாது. நமது கடந்த கால தவறுகள் நம்மையும் நம் தேவனையும் பிரிக்கின்றன. வேதாகமம் சொல்லுகிறது, “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.“
இயேசுவை உங்கள் வாழ்வில் அழையுங்கள்.
அன்பு நண்பரே, இது உங்கள் நாள். உங்களையும் உங்களைப் படைத்த கடவுளையும் எதுவும் பிரிக்க வேண்டாம். இயேசு உங்கள் கடந்தகால தவறுகளை மன்னிக்க விரும்புகிறார்.
இயேசுவைக் கலந்தாலோசிக்காமல் உங்கள் வாழ்க்கையில் தவறான முதலீடுகள் அல்லது தேர்வுகள் செய்திருந்தால் அவரிடம் அறிக்கையிடுங்கள். எந்தவொரு புதிய வணிகத்தையும் தொடங்குவதற்கு அல்லது முதலீடு செய்வதற்கு முன்பு நீங்கள் எப்போதும் அவரது கருத்தைக் கேட்பீர்கள் என்று தயவுசெய்து இயேசுவிடம் சொல்லுங்கள்.
சூதாட்டம், உங்கள் வருமானத்திற்கு மீறிய ஆடம்பரமான வாழ்க்கை போன்ற பழக்கங்களுக்கு நீங்கள் அடிமையாக இருந்தால், தயவுசெய்து உங்களை மன்னிக்கும்படி இயேசுவிடம் கேளுங்கள். உனக்கு ஒரு புதிய இருதயத்தைத் தரும்படி அவரிடம் கேளுங்கள். இயேசு இன்று உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும். எப்பொழுதும் அவரைப் பின்பற்றும் ஒரு புதிய இருதயத்தை அவர் உங்களுக்குக் கொடுப்பார்.
தேவனிடம் சொல்லும்: “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.” இயேசு உங்களில் ஏதேனும் பாவ வழிகளை வெளிப்படுத்தினால், தயவுசெய்து அவரிடம் மன்னிப்பு கேட்டு அதை விசுவாசத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்.
அன்புள்ள நண்பரே, இந்த நேரத்தில் நீங்கள் தனியாக உங்கள் போராட்டத்தை நடத்த வேண்டியதில்லை. இயேசு உங்களுக்காக திறந்த கரங்களுடன் காத்திருக்கிறார். ஒரு குழந்தை தன் தந்தையின் கையைப் பற்றிக்கொள்வதைப் போல அவரை நோக்கி ஓடி அவரைப் பற்றிக்கொள்வது உங்கள் முறை.
நாங்கள் இப்போது பிரார்த்தனை செய்யப் போகிறோம். தயவுசெய்து உங்கள் கரத்தை உங்கள் இதயத்தில் வைத்து இயேசுவின் பெயரைக் கூப்பிடுங்கள். உங்கள் இழப்புகளையும் ஏமாற்றங்களையும் இயேசுவின் முன்னிலையில் ஊற்றுங்கள்.
உங்கள் கடந்த காலத்திற்காக மன்னிப்பு கேளுங்கள். நீங்கள் மிகவும் வருந்துகிறீர்கள் என்று அவரிடம் சொல்லுங்கள். எந்தவொரு சூதாட்ட பழக்கத்திலிருந்தும் விடுபடும்படி அவரிடம் கேளுங்கள். இயேசு உதவி செய்வார். கீழே உள்ள ஜெபத்தை உங்கள் சொந்த வார்த்தைகளால் ஜெபியுங்கள். உங்களுடன் சேர்ந்து நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம்.
அன்புள்ள இயேசுவே, நான் தாழ்மையான இருதயத்தோடு உங்களிடம் வருகிறேன். நீங்கள் என் பரலோகத் தந்தை. எனது கடந்த கால தவறுகள் அனைத்தையும் மன்னித்து விடுங்கள். உங்கள் விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னைக் கழுவுங்கள். உங்களைக் கலந்தாலோசிக்காமல் நான் எடுத்த முடிவுகளுக்காக என்னை மன்னித்து விடுங்கள். என் கடந்த காலத்திலிருந்து என்னை உயர்த்துங்கள். எனக்கு ஒரு புதிய இதயத்தைத் தாரும்.
எப்போதும் உங்களைப் பின்தொடர்ந்து உங்களைப் பற்றிக் கொள்ளும் இதயம் எனக்கு வேண்டும். இயேசுவே, என் வாழ்வில் நீங்கள் எனக்குத் தேவை. உங்கள் உதவி இல்லாமல் இந்த சவாலான காலங்களை என்னால் கடந்து செல்ல முடியாது. என் வாழ்வில் வாங்கள். என்னைப் பிடித்துக் கொள்ளுங்கள், என்னை வழிநடத்துங்கள், என்னை உங்கள் பிள்ளையாக்குங்கள். நான் என் வாழ்நாள் முழுவதும் உன்னைப் பின்பற்ற விரும்புகிறேன். என் தேவனாயிருந்து, என்னை வழிநடத்துங்கள். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில், நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
அன்புள்ள நண்பரே, இன்று எங்களுடன் இணைந்ததற்கு நன்றி. இயேசு உங்களோடு பேசினார் என்று நம்புகிறோம். அவர் மட்டுமே உங்கள் இருதயத்தை மாற்ற முடியும். அவர் மட்டுமே உங்கள் வாழ்க்கையை உண்மையான அர்த்தத்துடனும் நோக்கத்துடனும் நிரப்ப முடியும். ஏனெனில் அவர்தான் உங்களை இந்த உலகிற்கு கொண்டு வந்த கடவுள். நீங்கள் எதற்காக அழைக்கப்பட்டீர்கள் என்பதை அவர் அறிவார். இயேசு உங்கள் வாழ்க்கையைத் தொட்டு உங்களை மாற்றுவாராக. இப்போது நீங்கள் அனுபவிக்கும் எல்லா சவால்களிலிருந்தும் அவர் உங்களை விடுவிப்பாரா?
நாங்கள் ஜெபிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் ஜெப கோரிக்கை உங்களிடம் உள்ளதா? கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பவும்.
Kadan purachanai mana ulaichal nimmathi illai. seivinai kolaru, hospital selavu ethilirunthu eppadi veli varaporomnu theriyavillai.
அன்புள்ள சகோதரி மணிமேகலை
நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம். இயேசு உங்களை நேசிக்கிறார். உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். நீங்கள் இருக்கும் நிதி சூழ்நிலையிலிருந்து உங்களை வெளியே கொண்டு வர அவர் விரும்புகிறார்.
நாங்கள் ஜெபித்து உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். இயேசு உங்களை ஆசீர்வதித்து, பலருக்கு உங்களை ஆசீர்வாதமாக மாற்றட்டும்.