You can read this message in English here => Lost your peace of mind?
அன்புள்ள நண்பரே, நீங்கள் அமைதியை எப்படி பெறுவது என்று வலைத்தளத்தில் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? Have you lost your peace of mind? நீங்கள் இழந்த அமைதியை திரும்ப பெற வேண்டும் என்று ஒரு ஜெபத்தோடு இந்த பதிவை எழுதி இருக்கிறோம். நீங்கள் இதை வாசிக்கும் பொழுது இயேசு உங்களிடம் பேசட்டும். உங்கள் வாழ்க்கையின் அமைதியைத் கெடுக்கும் விஷயங்களைச் சுட்டிக்காட்டட்டும். உங்கள் வாழ்க்கை ஒரு அமைதியான வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்பது இயேசுவின் உடைய பெரிய ஆசை. ஏனென்றால், நீங்கள் அவராலே சிருஷ்டிக்கப்பட்டவர்கள். அவர் உங்களுடைய பரலோக தகப்பன். Jesus wants to restore peace in your life.
பொழுதுபோக்குகள், ஷாப்பிங் மற்றும் நண்பர்களுடன் கேளிக்கை நேரங்கள் நம்முடைய இருதயத்துக்கு ஒரு மகிழ்ச்சியையும் ஓய்வையும் கொடுக்கிறது. ஆனால் இவைகள் நம்முடைய உள்ளத்திற்கு நிரந்தரமான அமைதியை கொடுப்பதில்லை. சீக்கிரமாகவே பழைய அமைதியற்ற சூழ்நிலைக்கு நம்முடைய இருதயம் மீண்டும் தள்ளப்படுகிறது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் கடையிலிருந்து அமைதியை விலை பேசி வாங்க முடியாது. நான் பணத்தை சம்பாதிக்கலாம்; ஆனால் அமைதியையோ நாம் சம்பாதிக்க முடியாது
இந்த உலகத்தை படைத்த ஆண்டவர் எப்படி காற்று சூரிய ஒளி மறை இவைகளை நமக்கு இலவசமாக கொடுத்தாரோ அதேபோல அமைதியையும் நமக்கு இலவசமாக கொடுக்க விரும்புகிறார். நாம் செய்ய வேண்டியது எல்லாம் நாம் இயேசுவின் உடைய சன்னிதியில் சென்று அவரிடத்தில் இருந்து இலவசமாக இந்த அமைதியை பெற்றுக் கொள்வது மாத்திரமே. ஆம் இது முற்றிலும் இலவசம்.
Lost Your peace of mind?
ஆண்டவர் இன்று உங்களை தேற்ற விரும்புகிறார். “அமைதியை தேடி” என்ற ஐந்து நாள் மின்னஞ்சல் (email) பிரயாணத்திற்கு உங்களை நாங்கள் அழைக்கிறோம். இது முற்றிலும் இலவசம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் Cancel செய்து கொள்ளலாம். கீழே உள்ள இந்த Form நீங்க Fill பண்ணி Submit செய்தீர்களானால், நாங்கள் உங்களோடு கூட தொடர்பு கொள்வோம் நன்றி.
கடவுளுடன் சமரசம் செய்யுங்கள்
அன்புள்ள நண்பரே, Lost your peace? Reconcile with Jesus today. ஒரு நிமிடம் நம் இதயங்களைச் சோதிப்போம். நாம் நம் வாழ்வில் தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் தவறு செய்து இயேசுவோடு ஒப்பிரவாகாமல் இருக்கிறோமா? இயேசுவிடம் திரும்பிச் சென்று, நமது கடந்தகாலத் தவறுகளுக்கு உண்மையாக மன்னிப்புக் கேட்போம்அப்படியாக நாம் இயேசு வீட்டு பிரிந்து ஒரு வாழ்க்கையை நாம் வாழ்வோமானால், நம்முடைய பழைய பாவங்களுக்கு ஏசுவிடம் மன்னிப்பு கேட்டு அவரிடத்தில் சேர்வோம். அப்போது அவர் நமது கடந்த கடந்த கால தவறுகளை மன்னிப்பார். அவர் நம்முடைய குற்ற உணர்வுகளில் இருந்து நம்மை விடுதலை செய்வார். அவர் நம் இதயங்களை அமைதியால் நிரப்புவார்.
இயேசு நம்முடைய வாழ்க்கையில் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகும். பைபிள் சொல்கிறது, “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.”. சாத்தான் எப்போதும் நம் மன அமைதியைத் திருட முயற்சிக்கிறான்.நம்முடைய பாவங்களை மன்னிக்க நாம் மனம் அமைதி அடைய இயேசு சிலுவையிலே மரித்து மீண்டும் உயிரோடு எழுந்தார். பைபிள் கூறுகிறது, “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.”
ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவோடு சமரசம் செய்வோம். கீழே உள்ள ஜெபத்தை எங்களுடன் சேர்ந்து உங்கள் சொந்த வார்த்தைகளில் ஜெபியுங்கள்.
அன்புள்ள இயேசுவே, தாழ்மையான இதயத்துடன் உங்களிடம் வருகிறேன். எனது கடந்த கால தவறுகளை மன்னியுங்கள். தெரிந்தோ தெரியாமலோ தவறான முடிவுகளை என் வாழ்க்கையில் எடுத்தேன். தயவு செய்து என்னை மன்னிக்கவும். உங்கள் விலைமதிப்பற்ற இரத்தத்தால் என்னைக் கழுவுங்கள். கடந்த காலத்தில் நான் செய்ததை நான் இனிமேல் செய்ய விரும்பவில்லை. எல்லா சோதனைகளையும் எதிர்க்கும் ஆன்மீக பலத்தை எனக்கு கொடுங்கள். என் வாழ்க்கையை தொடுங்கள். எனக்கு ஒரு புதிய இதயத்தை கொடுங்கள். நான் உங்களை முழு மனதுடன் பின்பற்ற விரும்புகிறேன். எனக்கு அமைதியான மனதை கொடுங்கள். என்னை உங்கள் பிள்ளையாக்குங்கள். இயேசுவின் வல்லமையான நாமத்தில், நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
உங்கள் இதயத்தில் உள்ள கசப்பைக் குணப்படுத்த கடவுள் விரும்புகிறார்
நம் இதயத்தில் உள்ள கசப்பு, நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆற்றல் மட்டுமல்ல, நம் மனதின் அமைதியை அழிக்கும் சக்தியும் கொண்டது. நம் இதயங்களில் கசப்பை வளர்ப்பது அமைதியற்ற இதயத்திற்கு வழிவகுக்கிறது. இயேசுவோடு சமரசம் செய்த பிறகும், கடந்தகால சம்பவங்களோ, அல்லது பிறரிடம் உள்ள கோபமோ கசப்புணர்வைக் தூண்டி விடலாம். ஒரு கடினமான மற்றும் மறக்க முடியாத சூழ்நிலையை நாம் கடந்து சென்றிருக்கலாம். ஒருவேளை அந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு கூட நடந்திருக்கலாம். ஆனால் அதே காரியங்களையும் மறுபடியும் மறுபடியும் யோசித்துக் கொண்டே இருந்தால், அதனால் ஏற்பட்ட காயம் அறவே ஆறாது ஆறவே ஆராது
அனேக வேலைகளில் நம்முடைய இருதயத்தில் உள்ள கசப்புகளை நாம் மறைத்து வைத்திருக்கிறோம். நாம் வெளியே சிரிக்கலாம். சிலர் இந்த ஆழமான கசப்புகளை பல வருடங்களாக தன்னுடைய இருதயத்திலே சுமந்து கொண்டிருக்கலாம்.
நாம் சொல்லலாம், “என் கடந்த கால கசப்புகள் என் உள்ளத்தில் ஆழமாக பதிந்துவிட்டது. அதிலிருந்து என்னால் இனிமேல் வெளியே வர முடியாது”. அன்பான நண்பரே, நம்மால் செய்ய முடியாத காரியங்களை இயேசு நமக்காக செய்து முடிக்க முடியும். அவர் நமக்கு உதவ விரும்புகிறார். அவர் நம்மை எல்லா கசப்பிலிருந்தும் குணப்படுத்த விரும்புகிறார். கவலைப்படாதிருங்கள். நம்முடைய அமைதிக்கான விலையை இயேசு ஏற்கனவே சிலுவையில் செலுத்திவிட்டார். பைபிள் சொல்கிறது, தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.
இயேசு நம் இதயங்களைக் காக்க விரும்புகிறார்
நம் இதயங்களையும் மனதையும் பாதுகாக்காவிட்டால், எந்த நேரத்திலும் நம் அமைதியை இழக்க நேரிடும். நாம் எப்படி நம் இதயத்தையும் மனதையும் பாதுகாப்பது? பைபிள் சொல்கிறது, “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்”
நம் வாழ்வில் தம்முடைய அமைதியைத் தருவதாக இயேசு வாக்களிக்கிறார். அவருடைய அமைதி நம் வாழ்நாள் முழுவதும் நம் இதயங்களையும் மனதையும் பாதுகாக்கும். இயேசு சொன்னார், “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.”
அன்பான நண்பரே, நாம் மீண்டும் ஒருமுறை கடவுளின் முன்னணியில் சென்று அவர் நமக்குத் தரத் தயாராக இருக்கும் மன அமைதியைப் பெறுவோமா? நாம் பணத்தையும் இதற்காக செலவழிக்க வேண்டியதில்லை. அதைப் பெறுவதற்கு நாம் அதிக தூரம் பயணிக்க வேண்டியதில்லை. உங்களுக்கு மன அமைதியை வழங்க இயேசு நீங்கள் இருக்கிற இடத்திற்கு வந்திருக்கிறார். முழு மனதுடன் அவரை நம்முடைய இதயத்திற்குள் அழைப்போம். உங்கள் இதயத்தில் உங்கள் கையை வைத்து கீழே உள்ள பிரார்த்தனையை உங்கள் சொந்த வார்த்தைகளில் ஜெபிக்கவும்.
இயேசுவே, அமைதியை எதிர்பார்க்கும் ஒவ்வொரு வாசகருடன் சேர்ந்து நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த அருமையான சகோதரர்களுக்காக அல்லது அருமையான சகோதரிக்காக நாங்கள் உம்முடைய பாதத்தண்டை வந்து நிற்கிறோம். இயேசுவே, நீங்கள் சமாதானத்தின் தேவன். ஆறுதலின் தேவன். வாசிக்கிறவர்களின் மனநிலை உங்களுக்கு தெரியும். தயவு செய்து அவர்களின் இதயத்தை உமது மகிமையான அமைதியால் நிரப்புங்கள். எல்லா ஏமாற்றமும், கவலையும், கசப்பும் அவர்களின் வாழ்வில் இருந்து மன அமைதியைப் பறிக்க கூடாதே.
இயேசுவே, நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம். நீங்கள் எங்கள் பரலோக தந்தை. நீங்கள் மட்டுமே எங்கள் நம்பிக்கை. இதை வாசிக்கிற ஒவ்வொருவரோடும் இப்பொழுதே நீங்க பேசுங்க. பிரார்த்தனை செய்யும் ஒவ்வொரு இதயத்தையும் முழுமையான அமைதியால் நிரப்புங்கள். எங்கள் முழு நம்பிக்கையையும் உங்கள் மீது வைத்துள்ளோம். எங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டதற்கு நன்றி. உங்களை போற்றி வணங்குகிறோம். இயேசுவே உங்களால் முடியாதது எதுவுமில்லை. எங்கள் பிரார்த்தனைகளுக்கு நீங்கள் நிச்சயமாக பதிலளிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இயேசுவின் வல்லமையான நாமத்தில் நாம் ஜெபிக்கிறோம். ஆமென்.
பிரியமானவர்களே, எங்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்ததற்கு மிக்க நன்றி. தொடர்ந்து இயேசுவை பற்றிக்கொள்ளுங்கள். அவர் நமது இரட்சகர். நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம். இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக.