அன்புள்ள நண்பரே, உங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்கான வழிகளைத் இணையத்தில் தேடுகிறீர்களா?
தயவு செய்து வாழ்க்கையில் எல்லா நம்பிக்கையும் போய்விட்டது என்ற முடிவுக்கு வர வேண்டாம். நாம் மேலும் செல்வதற்கு முன், எங்களைப் பற்றி சில விஷயங்களைச் சொல்கிறேன்.
நாங்கள் மருத்துவர்களோ அல்லது உளவியலாளர்களோ அல்ல. கடினமான சூழ்நிலைகளில் கடந்து செல்பவர்களுக்காக ஜெபிக்கிறோம். தேவன் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார். அவரது நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற ஒவ்வொருவரின் இருதயங்களையும் அவர் குணமாக்குகிறார். இயேசு உங்கள் வாழ்க்கையைத் தொட்டு உங்களுக்காக புதிய கதவுகளைத் திறக்க விரும்புகிறார்.
இயேசுவின் பிரசன்னத்திலிருந்து மக்கள் பெற்ற அற்புதங்களை நேரடியாக அறிய, எங்கள் சாட்சிகள் இணைப்பை இங்கே பார்க்கலாம்.
இவை ஒரு கட்டுக்கதை அல்ல, மக்கள் மகிழ்ச்சியுடனும் விவரிக்கும் நிஜ வாழ்க்கை சம்பவங்கள்.
நீங்க அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள். இயேசு உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும். உங்கள் பிரச்சனைகளில் இருந்து அவர் உங்களை வெளியே கொண்டு வர முடியும். கடவுளால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. இயேசு உங்களை நேசிக்கிறார், உங்கள் எதிர்காலத்தை மிகவும் நேசிக்கிறார்.
இந்த நெருக்கடியான நேரத்தில்.நீங்கள் அவசரமாக யாருடனாவது பேச வேண்டும் என்று விருப்பப்பட்டால், தயவுசெய்து உங்கள் நாட்டின் அரசாங்கம் மற்றும் என்ஜிஓ (NGO) நெருக்கடி வரிகளைப் (Crisis Lines) தொடர்பு கொள்ளவும்.
இந்த நெருக்கடிக் கோடுகள் avarainambu.com website உடன் தொடர்புடையவை அல்ல.
நம்பிக்கையின்மைக்கு மத்தியில் நம்பிக்கை உண்டு:
வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை என்று நாம் நினைக்கும் தருணங்கள் உண்டு. எங்கள் பிரச்சினைக்கு எந்த தீர்வும் இல்லை, யாரும் எங்களுக்கு உதவ முடியாது என்ற முடிவுக்கு நாம் வருகிறோம். ஆனால் நம் பிரச்சனைகளை விட பெரிய கடவுள் ஒருவர் இருக்கிறார். நமக்கு முன்னால் உள்ள பிரச்சனைகளை பார்ப்பதை நிறுத்தி தீர்வு கொடுக்கிற தேவனை பார்ப்பது.நல்லமா இருக்கும்.
நாம் திறக்க முடியாத கதவுகளை இயேசு திறக்க முடியும், நாம் செய்ய முடியாத காரியங்களை தேவன் செய்து முடிக்க முடியும். மனிதர்கள் நம்மை ஏமாற்றலாம்.ஆனால் நம்மைப் படைத்த தேவன் ஒருபோதும் நம்மை ஏமாற்றுவதில்லை.
வேதம் சொல்லுகிறது, “இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.” – ஏசாயா 59:1
உங்களுடைய பிரச்சினைகளைச் சமாளிக்க இயேசு உங்களுக்கு உதவ முடியும். அவர் உங்கள் இருதயத்தை வேறு எவரையும்விட நன்கு அறிவார்.
நீங்கள் இப்போது எங்கே இருந்தாலும், இயேசு உங்கள் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார். அவர் உங்களோடு பேசி உங்கள் வாழ்க்கையை சமாதானத்தால் நிரப்ப விரும்புகிறார். இயேசு, “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” என்றார். அவர் உங்களுக்கு எல்லா ஆசீர்வாதம் நிறைந்த ஜீவனையும் பரிபூரண ஜீவனை கொடுக்க விரும்புகிறார்.
நான் எப்படி மரிப்பது (How to Die), அல்லது நான் இறக்க விரும்புகிறேன் என்று தேடுவதை தயவுசெய்து நிறுத்துங்கள். இயேசுவோடு முழுமையாக வாழ்வது எப்படி என்று தேடத் தொடங்குங்கள்.
அவர் உங்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறார். அவர் உங்கள் கைகளைப் பிடித்து உங்களை வழிநடத்த விரும்புகிறார்.
நீங்கள் தனியாக இல்லை:
அன்புள்ள நண்பரே, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் தனியாக கடினமான காலங்களை கடந்து செல்ல வேண்டியதில்லை. யாரும் உங்களைப் புரிந்துகொள்வதில்லை அல்லது அக்கறை காட்டுவதில்லை என்ற முடிவுக்கு வர வேண்டாம்.
இயேசு சொன்னார், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” – மத்தேயு 11:28
இயேசு இன்றைக்கு இந்த அழைப்பை உங்களுக்கு கொடுக்கிறார்.நீங்கள் உங்கள் வாழ்க்கையிலேயே வருத்தப்பட்டு சோர்ந்து போய் இருக்கீங்களா?
இயேசு நம் இருதயங்களை பரலோக சமாதானத்தாலும் சந்தோஷத்தாலும் நிரப்ப விரும்புகிறார். இன்று உங்கள் இருதயம் சோர்ந்து பாரமாக இருக்கிறதா? உங்களிடம் பேச விரும்புகிறார். நீங்கள் தனியாக இல்லை. கடவுள் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டார். அவர் தனிமையான இதயங்களைத் தேடுகிறார். மக்கள் கஷ்டப்படும்போது அவரது இதயம் கசிகிறது. இன்று உங்கள் இருதயத்தை குணமாக்க இயேசு விரும்புகிறார்.
இயேசு உன்னை ஒருபோதும் கைவிட மாட்டார். இயேசு உங்கள்மீது எந்தளவு அக்கறை வைத்திருக்கிறார் என்பதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
நீங்கள் ஒரு தோல்வி அல்ல. இயேசு உங்கள் எதிர்காலத்தை மாற்ற முடியும்:
தோல்விகள் நிறைந்த வாழ்க்கையைப் பற்றி பலர் எங்களுக்கு எழுதியுள்ளனர். அவர்கள் அனுபவித்த ஆழமான காயத்தையும் வலியையும் அவர்களால் மறக்க முடியவில்லை. எந்தப் பெற்றோரும் தங்கள் குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பார்க்க விரும்புவதில்லை. உங்கள் பரலோகத் தகப்பனாகிய கடவுளும் நீங்கள் கஷ்டப்படுவதை விரும்பவில்லை.
அவர் கடந்த கால ஏமாற்றங்களை மாற்ற விரும்புகிறார். கடவுள் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறார், “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன்,” – ஏசாயா 43:4
நீங்கள் கடவுளுக்கு அருமையானவர்கள். அவரே உங்கள் பரலோகத் தந்தை. அவர் உங்கள் கைகளைப் பிடித்து உங்களை வழிநடத்த விரும்புகிறார்.
“என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்;” என்று உங்கள் கடவுள் சொல்லுகிறார். அவர் உங்கள் வாழ்க்கையை ஆறுதல்படுத்தவும், உங்களுக்கு ஒரு புதிய எதிர்காலத்தை கொடுக்கவும் விரும்புகிறார். நீங்கள் எப்போதும் தனியாக இல்லை.
இயேசு உங்கள் இருதயத்தை குணமாக்க விரும்புகிறார்:
ஏமாற்றம், காயம், வலி, அல்லது இழப்பு நம் இதயங்களை உடைக்கலாம். நம்முடைய நண்பர்களோடு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமோ அவ்வளவு ஆழமாக அவர்கள் ஏமாற்றும் போது நம்முடைய இருதயம் பாதிக்கப்படுகிறது.
நம் வாழ்க்கை ஒரு கரும்பலகையாக இருந்தால் நலமா இருக்குமே என்று நாம் விரும்புகிறோம். எல்லாவற்றையும் அழித்து மீண்டும் புதியதாகத் தொடங்கலாம். நம்முடைய வாழ்க்கையில் உள்ள காயங்களும், வேதனைகளும் ஆறுவதற்கு நீண்டு நாட்களாகிறது
இன்று உங்கள் வாழ்க்கையை சமாதானத்தாலும் மகிழ்ச்சியாலும் நிரப்ப இயேசு விரும்புகிறார். மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார். – ஏசாயா 54:10
இந்த சமாதானத்தைப் பெற நீங்கள் தயாரா? நீங்கள் இனி காயத்தை சுமக்க கடவுள் விரும்பவில்லை. தூக்கமில்லாத இரவுகளைக் கழித்தது போதும், கண்ணீர் சிந்தியது போதும். நாம் இயேசுவின் பிரசன்னத்துக்குச் சென்று நம்முடைய வாழ்க்கையைத் தொடும்படி அவரிடம் கேட்போம்.
இயேசு சொன்னார், “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான் என்றார்.
இயேசுவை உங்கள் வாழ்வில் அழைக்க உங்கள் இருதயத்தின் கதவைத் திறக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
அமைதிக்கான ஜெபம்
நாம் இயேசுவின் பிரசன்னத்துக்குச் சென்று அவரிடம் ஜெபிப்போம். அவர் நம் பரலோகத் தகப்பன். நமக்கு உதவி செய்ய விரும்புகிறார், தயவுசெய்து உங்கள் கையை உங்கள் இதயத்தில் வைத்து இயேசுவின் பெயரை அழைக்கவும். உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து எங்களுடன் கீழே உள்ள பிரார்த்தனையை ஜெபியுங்கள். இயேசு உங்கள் ஜெபங்களைக் கேட்கிறார்.
அன்புள்ள இயேசுவே, எங்களோடு சேர்ந்து ஜெபிக்கும் எங்கள் அன்பான சகோதரர் அல்லது சகோதரியுடன் சேர்ந்து ஜெபிக்கிறோம். நீங்கள் அவர்களை மிகவும் நேசிக்கிறீர்கள். அவர்கள் இப்போது அனுபவிக்கும் பிரச்சினைகளை நீங்கள் அறிவீர்கள்.
தயவு செய்து அவர்களின் வாழ்க்கையைத் தொடுங்கள். எல்லா காயங்களையும் வலிகளையும் அகற்றுங்கள். நீங்களே எங்கள் நம்பிக்கை, எங்கள் எல்லா ஜெபங்களுக்கும் பதில். நாங்கள் உங்களிடத்திலே மன்றாடுகிறோம். அவர்களின் கடந்த கால தவறுகள் அனைத்தையும் மன்னித்து விடுங்கள். உங்கள் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் அவர்களைக் கழுவுங்கள்.
தயவு செய்து அவர்களின் கடந்தகால வலிகளையும், காயங்களையும் குணமாக்குங்கள் நீக்கி போடுங்க. அவர்களின் இதயத்தை குணப்படுத்துங்க. அவர்களின் எல்லா பிரார்த்தனைகளுக்கும் பதிலளியுங்கள். அவர்களின் உடைந்த வாழ்க்கைத் துண்டுகளை சரி செய்யுங்கள். அவர்களுக்கு புதிய இருதயத்தைக் கொடுங்கள். பர லோக சமாதானத்தினால் நிறைத்து, நல்ல நிம்மதியைக் கொடுங்க.
தயவுசெய்து அவர்களை உங்கள் மகிழ்ச்சியால் நிரப்புங்கள். அவர்களின் காப்பாத்துங்கள். இயேசுவே, நாங்கள் உம்மை நம்புகிறோம். நாங்கள் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம். நீங்கள் இந்த ஜெபங்களுக்கு பதிலளிக்கப் போகிறீர்கள். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.
அன்பு நண்பரே, இயேசு உங்கள் ஜெபத்தைக் கேட்டார். அவர் நிச்சயம் உங்கள் கைகளைப் பிடித்து உங்களை வழிநடத்துவார். இயேசு உங்களை ஆசீர்வதித்து அநேகரை ஆசீர்வதிப்பாராக.