Home » இயேசுவைப் பற்றி » அவருடைய மரணத்திற்காக நினைவு கூறப்படுகிறார் He Was Remembered For His death

அவருடைய மரணத்திற்காக நினைவு கூறப்படுகிறார் He Was Remembered For His death


               

                    

You can read it in English here

நீல் ஆம்ஸ்ட்ராங் வரலாற்று புத்தகங்களில் சந்திரனில் நடந்த முதல் மனிதராக எப்போதும் நினைவுகூரப்படுவார். சார்பியல் கோட்பாட்டின்(Theory of relativity) கண்டுபிடிப்புக்காக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்றென்றும் நினைவுகூரப்படுவார். நெப்போலியன், அலெக்சாண்டர் மற்றும் பிற பேரரசர்களை அவர்களின் வீரத்திற்காக உலகம் இன்னும் நினைவில் கொள்கிறது. இந்த புகழ்பெற்ற மனிதர்களைப் பற்றியும் அவர்களின் புகழ்பெற்ற சாதனை மற்றும் அவர்களின் வெற்றிகளைப் பற்றியும் அதிகம் எழுதப்பட்டுள்ளது. 

ஆனால் ஒரு மனிதன் அதிகம் சாதிக்காமல் வாழ்ந்து இறந்தார். அவர் எந்த நாட்டையும் கைப்பற்றவில்லை, எந்த அறிவியல் கண்டுபிடிப்பையும் கொண்டு வரவில்லை. அவர் முப்பத்து மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்தார். அவர் பூமியில் இருந்தபோது சிலர் அவரைப் பின்தொடர்ந்தனர். அவரது வாழ்நாளில் ஒருபோதும் வடக்கிலிருந்து தெற்கிலோ அல்லது கிழக்கிலிருந்து மேற்கிலோ சில நூறு மைல்களுக்கு மேல் பயணித்ததில்லை. அவர் ஒரு ஏழை தச்சருக்குப் பிறந்தார், அவருடைய வாழ்நாள் முழுவதும் சொத்து எதுவும் சம்பாதிக்க வில்லை. ஆனால் இந்த பூமியில் பிறந்த வேறு எந்த மனிதனையும் விட அவரைப் பற்றி ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அவர் மரிக்கும் முன்பதாக தான் செய்த எல்லாவற்றையும் விட தன் மரணத்தை நினைவு கூறுமாறு சொன்னார். இப்போது, ​​நீங்கள் அவருடைய பெயரை யூகித்திருப்பீர்கள். ஆம், அவருடைய பெயர் இயேசு. 

இயேசுவுக்கு கொள்ளையர்களுக்கும் மோசமான குற்றவாளிகளுக்கும் விதிக்கப்பட்ட ஒரு கொடூரமான மற்றும் வெட்கக்கேடான மரண தண்டனை கொடுக்க பட்டது. புனித வெள்ளி (Good Friday) அன்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் உலகம் ஏன் இயேசுவின் மரணத்தை நினைவில் கொள்கிறது? இயேசு பல அற்புதங்களை செய்தார். குருடரை குணமாக்கினார். முடவர்கள் நடந்தார்கள். ஆனால் இந்த அற்புதங்கள் எல்லாவற்றை பார்க்கிலும் இவர் செய்த ஒரு அற்புதர் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தியது. இயேசு எல்லா மனிதர்களின் பாவங்களையும் மன்னிக்கும் வல்லமை தனக்கு உண்டு என்று சொன்னார். இந்த இயேசு நம்முடைய பாவங்களை மன்னிக்க முடியுமா? உலகம் முழுவதும் செய்த தவறுகளை இயேசு எவ்வாறு மன்னிக்க முடியும்? 

இயேசுவின் மரணம் என் பாவங்களை எவ்வாறு மன்னிக்கும்? 

இயேசு கொண்டு வந்த மன்னிப்பு என்ற கருத்தை ஏற்றுக்கொள்வதில் வலுவான எதிர்ப்பு உள்ளது. கடவுள் மன்னிக்க முடியுமா? நான் உலகின் கிழக்குப் பகுதியிலிருந்து வருகிறேன். கிழக்குப் பார்வையில், ஏழைகளுக்கு உதவுதல், விதவைகள் மற்றும் அனாதைகளை கவனித்தல் போன்ற நல்ல செயல்களால் பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்யப்பட வேண்டும். நல்ல செயல்களால் ஈடுசெய்ய யாராவது தவறினால், அவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டும். கிழக்கு உலகில் (Eastern world) இது ஒரு பொதுவான பார்வை. 

நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு பின்னணியில் இருந்து வருகிறோம். நமது கடந்தகால வாழ்க்கை வேறு. நாம் தெரிந்தோ தெரியாமலோ வெவ்வேறு தவறுகளைச் செய்துள்ளோம். நம்மை சுத்தமாக கழுவவும், சொர்க்கம் செல்ல தகுதியுடையவராக்கவும் எவ்வளவு நல்ல செயல்கள் (பிராயச்சித்தங்கள்) போதுமானது? இயேசு தனது மரணத்தின் மூலம் பாவ மன்னிப்பு (forgiveness) என்ற புதிய கருத்தை கொண்டு வந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் மன்னிப்பைக் கொடுக்கும் என்றார். இறப்பதற்கு ஒரு நாள் முன்பு இயேசு தம்முடைய சீஷர்களை ஒரு சிறிய கூட்டத்திற்காக கூட்டிச் சென்றார். அவர் ரொட்டியை எடுத்து துண்டுகளாக உடைத்தார். அவர் தனது சீடர்களுக்குக் கொடுத்தார், உடைந்த ரொட்டி அவருடைய உடைக்கப்படப்போகிற உடலைக் குறிக்கிறது என்றார். பின்னர் அவர் திராட்சைரச கோப்பையை எடுத்து, தம்முடைய சீஷர்களை குடிக்கச் சொன்னார். அவர் மறுநாள் சிலுவையில் சிந்துவார் என்றும், திராட்சைரசம் அவருடைய இரத்தத்தை குறிக்கிறது என்றும் இயேசு கூறினார். 

அந்த இரவில் அவர் மனிதகுலத்துடன் ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அந்த உடன்படிக்கையின்படி, நாம் செய்த தவறுகளின் முழு தண்டனையையும் இயேசுவின் மேல் விழும். இயேசு நமக்கு பதிலாக கடவுளுடைய தண்டனையை அனுபவிப்பார். அவர் சிலுவையில் இறப்பார். அவர் தனது இரத்தத்தை சிந்தி மூச்சுத் திணறல் அடைவார். அவர் நமக்காக மரித்ததினாலே நாமேல் வில்லா வேண்டிய தண்டனை அவர் மேல் விழுந்தது. இனி நம்முடைய பாவத்திற்காக தண்டனையை அனுபவிக்க வேண்டியது இல்லை. 

இயேசு ஏன் சிலுவையில் இறக்க வேண்டும்? 

கடவுள் அன்பானவர் என்று சொல்கிறோம். ஒருவர் நம்மை நேசிக்கிறார் என்றால் அதை அவர் வெளிப்படுத்த வேண்டும். கடவுள் உண்மையிலேயே அன்பின் ஆதாரமாக இருந்தால், அவர் நம்மை உண்மையாக நேசிக்கிறார் என்றால், அவர் தனது அன்பை வெளிப்படுத்த வேண்டும். அவர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை அவர் காட்ட வேண்டும். கடவுள் தம் சக்தியைக் மாத்திரம் காட்டிக் கொண்டிருக்க முடியாது. நம்மிடையே பயத்தைத் மாத்திரம் தூண்ட முடியாது. கடவுளின் சக்தி (God's power) அவருடைய அன்பின் வெளிப்பாடு அல்ல. இயேசு கடவுள் என்றாலும் அவர் ஒரு மனிதராக ஆனார், அவருடைய சக்தியைக் காட்டுவதற்காக அல்ல, ஆனால் அவர் நம்மை எவ்வளவு நேசித்தார் என்பதை வெளிப்படுத்துவதற்காக. அவர் ஏழைகள் மத்தியில் வாழ்ந்தார். அழுதவர்களுடன் அழுதார். அவர் தனது இரக்கத்தையும் அன்பையும் வெளிப்படுத்தினார். மக்கள் திசையில்லாமல் தங்கள் வாழ்க்கையை வாழ்வதைக் கண்ட அவரது இதயம் உருகினது. இயேசு மனிதகுலத்தை மிகவும் நேசித்ததினால், அவர் முழு தெய்வீக தண்டனையையும் எடுத்துக் கொண்டார். அவர் தனது வாழ்க்கையை நம் மேல் வைத்த அன்பிற்காக தியாகம் செய்தார். 

இயேசுவிடமிருந்து நீங்கள் எவ்வாறு மன்னிப்பைப் பெற முடியும்? 

கடவுளின் மகனான, இயேசு கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்தினார். நாம் மன்னிப்பைப் பெற வேண்டுமானால், மூன்று எளிய காரியங்களை செய்ய வேண்டும். 

நம்புங்கள்: உங்கள் பாவங்களை இயேசு மன்னிக்க முடியும் என்று உங்கள் இதயத்தில் நம்புங்கள். 

மன்னிப்பு கேளுங்கள்: உங்கள் கடந்த கால தவறுகளை இயேசுவிடம் ஒப்புக் கொள்ளுங்கள். நீங்கள் செய்த தவறுகளுக்காக எவ்வளவு வருந்துகிறீர்கள் என்று அவரிடம் சொல்லுங்கள். அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். 

பெற்றுக்கொள்ளுங்கள் : கடவுளின் மன்னிப்பை பெற்றுக்கொள்ளுங்கள். பைபிள் சொல்கிறது, "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்".

நம்முடைய கடந்த கால தவறுகளை மன்னிப்பதாக கடவுள் வாக்குறுதி அளிக்கிறார். அவருடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்வது மட்டுமே நாம் செய்ய வேண்டியது. தம்முடைய சீஷர்கள் தம்முடைய மரணத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். இதன் மூலம் அவர் எல்லா மனிதர்களுடனும் ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளார். அது நம்முடைய கடந்த காலத்தை மன்னிப்பதற்கான மன்னிப்பின் ஒப்பந்தம். 

உங்களுக்கு இந்த மன்னிப்பு வேண்டுமா? ஒன்றாக ஜெபிப்போம். தயவுசெய்து கீழேயுள்ள ஜெபத்தை உங்கள் சொந்த வார்த்தைகளில் செய்யுங்கள். 

அன்புள்ள இயேசுவே, தயவுசெய்து எனது கடந்த கால தவறுகளை மன்னியுங்கள். நான் பல தவறுகளை செய்திருக்கிறேன். நான் செய்த ரகசிய தவறுகள் பற்றி யாருக்கும் தெரியாது. என் இதயத்தில் உள்ள ஆழமான ரகசியங்களைப் பற்றி யாருக்கும் தெரியாது. இயேசுவே, என் இதயத்தில் உள்ள அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள். நான் ரகசியமாக என்ன செய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். தயவுசெய்து என் வாழ்க்கையை மாற்றுங்கள். உங்களது விலைமதிப்பற்ற இரத்தத்தால் என்னைக் கழுவுங்கள். என்னை பரிசுத்தமாக்குங்கள். நான் முழு மனதுடன் உங்களைப் பின்தொடர விரும்புகிறேன். என் தீய பழக்கத்திலிருந்து வெளியே வர எனக்கு உதவுங்கள். அதிலிருந்து பல முறை வெளியே வர முயற்சிக்கிறேன். தயவுசெய்து எனக்கு உதவுங்கள். உங்கள் பலத்தின் மூலம், எனது கடந்தகால தீய தயவுசெய்து என்னை மன்னித்து என்னை சுத்தமாக்குங்கள். நான் இயேசுவின் பெயரில் ஜெபிக்கிறேன், ஆமென்.

Leave a Comment

நீங்கள் இயேசுவை ஏற்று கொண்டீர்களா. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம்.

ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு, உங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.

       

Topics

விடுதலை தியானம் இயேசுவைப் பற்றி