You can read it in English here
நாம் ஒரு ஆப்பிள் பழத்தின் விதையை விதைத்தால் , அது வளர்ந்து ஆப்பிள் மரமாக மாறும். அது ஆப்பிள் பழத்தை தரும். அது ஒருபோதும் ஆரஞ்சு அல்லது திராட்சை பழத்தை தராது. விதை மரத்தின் தன்மையையும் அதன் பழங்களையும் தீர்மானிக்கிறது. நாம் எந்த வகையான விதை விதைக்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு, பழங்களை அறுவடை செய்கிறோம். தரமான விதைகளை விதைத்தால் நாம் நல்ல பழங்களை அறுவடை செய்கிறோம், ஆனால் களைகளின் விதைகளை விதைத்தால், பயனுள்ள எதையும் அறுவடை செய்யமுடியாது. அதேபோல நாம் பல விஷயங்களை நம் வாழ்க்கையில் விதைக்கிறோம். நல்லது மற்றும் கெட்டது, புனிதமானது மற்றும் அசிங்கமானது, வெளிப்படையானது மற்றும் ரகசியமானதுமான விதைகள். ஒவ்வொரு வார்த்தையினாலும், செயலினாலும், எண்ணங்களினாலும் நம் வாழ்நாளில் அவற்றை தொடர்ந்து விதைக்கிறோம். நாம் ஒவ்வொரு நாளும், மணியும் மற்றும் நிமிடமும் விதைத்துக்கொண்டே இருக்கிறோம். விதைகள் வளர ஆரம்பித்து ஒரு மரமாகின்றன. நாம் உணர்ந்தாலும், உணராமல்போனாலும், மரங்கள் பழங்களைத் தரத் தொடங்குகின்றன, ஒன்றல்ல, இரண்டல்ல, நம் வாழ்வில் பல பழங்களை தர தொடங்குகின்றன. பழத்தின் தன்மை நாம் விதைக்கும் விதைகளைப் பொறுத்தது.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான முடிவுகளை எடுக்கிறோம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அவற்றில் சில முக்கியமானவை, சில சாதாரணமானவை. எடுத்துக்காட்டாக, ஒரு படிக்கட்டு வழியாக செல்லலாமா அல்லது லிஃப்ட் வழியாக செல்லலாமா. நெரிசலான பஸ்ஸில் நம்மை விட வயதான ஒருவருக்கு நம் இருக்கையை வழங்கலாமா அல்லது நாமே அமர்ந்துகொள்ளலாமா. ஒரு நபர் இல்லாதபோது அவரை பற்றி பேசலாமா வேண்டாமா (என்பது போன்றவை) என்பதை நாம் தீர்மானிக்கிறோம். சில முடிவுகள் பாதிப்பில்லாதவை, சில முடிவுகள் பாதிப்புள்ளவை. நாம் எடுக்கும் முடிவுகளும் அதன் விளைவாக ஏற்படும் செயல்களும் நம் வாழ்க்கையையும் மற்றவர்களின் வாழ்க்கையையும் பாதிக்கின்றன.
இயேசு இன்றைக்கு உங்களுடைய இருதயத்தை சமாதானத்தினால் நிறைக்க விரும்புகிறார். "அமைதியை தேடி" என்ற ஐந்து நாள் மின்னஞ்சல் (email) பிரயாணத்திற்கு உங்களை நாங்கள் அழைக்கிறோம். இது முற்றிலும் இலவசம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் Cancel செய்து கொள்ளலாம். கீழே உள்ள இந்த Form நீங்க Fill பண்ணி Submit செய்தீர்களானால், நாங்கள் உங்களோடு கூட தொடர்பு கொள்வோம் நன்றி.
பைபிள் சொல்கிறது மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
நம்முடைய கடந்தகால பாவங்களை கடவுள் மன்னிப்பார் என்பது உண்மைதான். இது குறித்து எந்த சந்தேகமும் இல்லை. அவர் இரக்கமுள்ள கடவுள். நம்முடைய எல்லா பாவங்களுக்காகவும் அவர் சிலுவையில் மரித்தார். அவர் நமக்கு ஒரு புதிய இருதயத்தைத் தருகிறார். நித்திய ஜீவனுக்கான கடவுளின் வாக்குறுதி, அவரை நம்புகிறவருக்கு எப்பொதும் உண்டு. ஆனால் ஒரு நபர் ஒரு குற்றத்தைச் செய்தால், கடவுள் அவரை மன்னித்த பிறகும் கூட அவர் நாட்டின் சட்டத்தை பின்பற்ற வேண்டும். கடவுளின் மன்னிப்பின் மூலம் அவர் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தாலும், அவர் செய்த குற்றத்திற்காக பூமியில் தண்டனையிலிருந்து தப்பிக்க இது உத்தரவாதம் அளிக்காது. ஒரு நபர் ஒரு குற்றத்தைச் செய்தாலும், தனது பணத்தினாலும் சக்தியினாலும் சட்டத்திலிருந்து தண்டனையிலிருந்து தப்பித்தால், அவர் பூமிக்குரிய தண்டனையிலிருந்து தப்பிக்கிறார், ஆனால் இன்னும் கடவுளின் நித்திய தண்டனையை அனுபவிக்க வேண்டும். கடவுளிடமிருந்து மன்னிப்பைப் பெற்ற பிறகும் பைபிளில் உள்ள பல மனிதர்கள் தங்கள் விதைகளின் பலனை அறுவடை செய்தனர். அவர்கள் விதைத்த விதை அதன் இயற்கையான வேரை எடுத்து பழங்களை கொடுத்தது.
கீழ்ப்படியாமையின் விதை காரணமாக பெரிய தீர்க்கதரிசி மோசே வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்திற்குள் நுழைய முடியவில்லை. காமமும் அதிகாரமும் கொண்ட தாவீது ராஜா தான் விதைத்த விதைகளின் பலனால் தன் பாவங்களின் விளைவுகளை அனுபவித்தார்.தனது சகோதரனை ஏமாற்றிய யாக்கோபு, தனது சொந்த மாமனால் ஏமாற்றப்பட்டார். அன்புள்ள நண்பரே, நாம் அதற்கு விதிவிலக்கல்ல. கடவுள் நம் கணக்குகளையும் அப்படியே நியாயம் தீர்ப்பார். ரகசிய பாவங்களை நாம் ஒருபோதும் கடவுளிடமிருந்து மறைக்க முடியாது. நம்முடைய பாவமான வாழ்க்கையைத் தொடரலாம் மற்றும் கடைசி நிமிடத்தில் மன்னிப்பு கேட்கலாம் என்று நாம் நினைத்தால், பைபிள் நமக்கு ஒரு உறுதியான நினைவூட்டலைத் தருகிறது - நாம் கடவுளை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. கடவுளின் மன்னிப்பு என்பது நம் பாவங்களை (வேண்டுமென்றே)மீண்டும் தொடர்வதற்கு அனுமதி சாசனம் அல்ல . சமநிலையையும் ஒழுங்கையும் பராமரிக்க, உலகம் ஒரு பொதுவான சட்டத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த உலகில் நாம் எதை விதைக்கிறோமோ அதை அறுப்போம் என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது, இதை நம் வழக்கத்தில் "உப்பு சாப்பிட்டவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும்" என்று கூறுவோம்.
மருத்துவர்களால் அடிப்படை மருந்து கூட கண்டுபிடிக்க முடியாத நோய் கேன்சரோ அல்லது எய்ட்ஸோ அல்ல. மருந்து கண்டுபிடிக்க முடியாத நோய் பாவமே. இது மிகப்பெரிய நோயாகும், ஏனெனில் அது நித்திய மரணத்தை ஏற்படுத்துகிறது. கடவுளே தனது சொந்த மகனைக் கொடுத்து மிகப் பெரிய நோயாகிய பாவத்துக்கு ஒரு தீர்வைக் கொடுத்தார். கிறிஸ்துவின் இரத்தம் நம்முடைய எல்லா பாவங்களையும் தூய்மைப்படுத்தி நித்திய ஜீவனைத் தருகிறது. ஆனால் அது ஒருபோதும் பாவத்தைத் தொடர்வதற்கு உரிமம் அளிக்காது. திருமணத்திற்கு வெளியே ஒரு உறவில் ஈடுபடும் ஒரு மனிதன் தன் சுயதன்மையை இழந்து சமுதாயத்தில் அவமானத்தை அடைகிறான். தனது உறவை மறைப்பவன் உலக அவமானத்திலிருந்து தப்பிக்கக்கூடும், ஆனால் நித்திய உலகில் தன்னுடைய தண்டனையை நிச்சயம் பெறுவான். ஒவ்வொரு பாவமும் நம் மனித திசுக்களில் ஒரு காயத்தை உருவாக்குகிறது. கடவுள் காயத்தை குணப்படுத்துகிறார், ஆனால் தழும்பு குணமாவதில்லை. திருமணத்திற்கு வெளியே ஏற்படுகிற தகாத உறவுகள் ஒரு குழந்தையை ஏற்படுத்தக்கூடும். அதின் தாய் கடவுளுடன் ஒப்புரவாகி கடவுளின் மன்னிப்பைப் பெற முடியும். ஆனால் இந்த உலகத்தின் தீர்ப்பின் மத்தியில் குழந்தை வளரும்போது வாழ்நாள் முழுவதும் வலி ஏற்படுகிறது. இணையத்தில் தோன்றுகிற இரகசிய பாவங்கள் பாதிப்பில்லாதவை என்று தோன்றலாம். ஆனால் நாம் விதைத்ததை அறுவடை செய்கிறோம் என்று பைபிள் சொல்லவில்லையா? நாம் எதை விதைக்கிறோமோ அதை அறுவடை செய்துதான் ஆகா வேண்டும், ஒருவர் கூட தப்ப முடியாது. அப்போஸ்தலன் பவுல் எழுதினார், தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்
அன்புள்ள நண்பரே, இன்று நீங்கள் என்ன விதை விதைக்கிறீர்கள்? நல்ல விதைகளை விதைக்கிறீர்களா? கடவுள் உங்கள் கடந்த பாவத்தை மன்னித்து இன்று உங்கள் காயங்களை குணப்படுத்த விரும்புகிறார். *கடவுளிடம் திரும்பிச் செல்ல இது ஒருபோதும் தாமதமாகாது. என்னுடன் ஜெபிப்பீர்களா?
அன்புள்ள கடவுளே, நான் என் வாழ்க்கையில் நல்ல விதைகளை விதைக்க விரும்புகிறேன், நல்ல பலனை அறுவடை செய்ய விரும்புகிறேன். ஆண்டவரே, எனது கடந்த கால தவறுகளை மன்னித்து, அதை நான் மீண்டும் செய்யாமல் இருக்க எனக்கு உதவிசெய்யுங்கள். வாழ்க்கையில் கவனமாக முடிவுகளை எடுக்கவும் எனக்கு உதவிசெய்யுங்கள். நல்ல எண்ணங்கள், செயல்கள் மற்றும் சொற்களால் என் வாழ்க்கையை விதைக்கவும், அதனால் நான் நல்ல பலனை அறுவடை செய்யவும் எனக்கு உதவுங்கள். மேலும் நல்லவற்றில் கவனம் செலுத்தவும், தீமையிலிருந்து விலகி இருக்கவும் உதவுங்கள். தவறான விதைகளை விதைப்பதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி எனக்கு கற்பித்து, என்னை எச்சரித்து வழிநடத்துங்கள். நான் இயேசுவின் பெயரில் ஜெபிக்கிறேன், ஆமென்.
நீங்கள் இயேசுவை உங்கள் ஆண்டவராக ஏற்று கொண்டீர்களா? நீங்கள் அடுத்தாக என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இங்கே பார்க்கலாம் =>
நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம். உங்கள் ஜெப உதவிக்கு நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.