Home » விடுதலை » கவலைலிருந்து » கவலைப்பட வேண்டாம் – எனது உண்மையான அனுபவம்

கவலைப்பட வேண்டாம் – எனது உண்மையான அனுபவம்


               

                    

You can read it in English here

இது என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம். இயேசு என்னை எப்படி ஒரு நேருக்கமான நேரத்திலே வழி நடத்தினார் என்று உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

உடல் சோதனை அறிக்கையைப் பகிர்ந்து கொள்ள மருத்துவர் எனது மருத்துவமனை அறைக்குள் நுழைந்தார். நான் அதற்கு முந்தைய நாள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு திரும்பிச் வரும்போது திடீரென்று என் உடலின் ஒரு பக்கம் உணர்ச்சியற்று போனது. என்னால் பேசவும் முடியவில்லை. என் உடலும், மூளையில் சில பகுதியும் செயலிழந்து போனது. ஆனால் அடுத்த இருபது நிமிடங்களில் என் உடலும் மூளையும் மீட்கப்பட்டன. ஆரம்பத்தில், எனக்கு லேசான பக்கவாதம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் சந்தேகித்தனர். எம்.ஆர்.ஐ, ரத்த பரிசோதனை மற்றும் சி.டி ஸ்கேன் எடுக்கும்படி அவர்கள் என்னிடம் கேட்டார்கள். புற்றுநோய், மூளை நோய்த்தொற்று போன்ற நோய்களில் ஒன்று எனக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவைகள் குணப்படுத்த முடியாத நோய்கள். சில பரிசோதனைக்கு பின்னர் மூளை புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களை சுட்டிக்காட்டியது. ஆனால் அதை உறுதிப்படுத்த வழி இல்லை. தெளிவு பெற மூளையில் அறுவை சிகிச்சை செய்து சில பகுதிகளை சோதிக்க வேண்டும் என்று டாக்டர் சொன்னார்கள். அந்த அறுவை சிகிச்சையின் பக்க விளைவுககளை குறித்து எனக்கு எடுத்து சொன்னார்கள்.


பரிசோதனையின் மூலம் புற்றுநோய் என்று முடிவானால், நான் உடனடியாக கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சையை தொடங்க வேண்டும். இது ஒரு நெருக்கமான தருணம் எங்களுக்கு. 

இவை அனைத்தும் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு. எங்கள் வீட்டில் ஒரு குடும்ப பிரார்த்தனை நேரம் இருந்தது. பின்வரும் சொற்களைக் கொண்ட பழைய பாடலைத் நங்கள் குடும்பமாக சேர்ந்து பாடினோம். 

அவர் (இயேசு) என்னை கை விடமாட்டார். 

அவர் (இயேசு) என்னை கை விடமாட்டார்.

பெரும் புயல் வந்தாலும் பெரும் காற்று வீசினாலும்

அவர் என்னை கை விடமாட்டார். 

மூன்று நாட்களுக்கு முன்பு நாங்கள் இதைப் பாடியபோது, ஒரு பெரிய நோய் என்னைத் தாக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த பாடல் என் உள்ளத்தை ஆழமாக தொட்டது. ஆபரேஷன் செய்ய வேண்டிய நாள் வந்தது. என்னை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் அனைத்து குழாய்களையும் இணைத்தனர். மூன்று நாட்களுக்கு முன்பு குடும்பமாக நாங்கள் பாடிய பாடலை கடவுள் எனக்கு நினைவூட்டினார். “அவர் (இயேசு) என்னை விடமாட்டார். பெரும் புயல் வந்தாலும் பெரும் காற்று வீசினாலும்அவர் என்னை விடமாட்டார்.” என்ன ஒரு அற்புதமான பாடல். நான் இந்த பாடலைப் என் மனதிலே பாடி கொண்டிருந்தேன். 

மயக்க மருந்து என்னை மயக்கமாக்கியது. என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு உணர்வு திரும்பும் போது, நான் ஐ.சி.யுவில் (ICU) இருந்தேன். நான் ஒரு உரத்த குரலைக் கேட்டேன், “இது கடவுளின் பிரசன்னம். அவரது பெயரை அறிவி”. நான் என் மயக்க மருந்திலிருந்து மீண்டு வந்தேன். என் வார்த்தைகள் என் கட்டுப்பாடு இல்லாமல் பலவந்தமாக வந்தன. யாரோ என்னிடமிருந்து வார்த்தைகளை பறிப்பதை போல் உணர்ந்தேன். நான் கடவுளைப் புகழத் தொடங்கினேன். என்னைச் சுற்றி கடவுளின் பெரும் பிரசன்னம் இருந்தது. நான் ஐ.சி.யுவில் (ICU) ஆண்டவரை துதிக்க ஆரம்பித்தேன். இது கடவுளின் பிரசன்னம். அவர் இங்கே இருக்கிறார் என்று நான் பலமுறை சொன்னேன். இயேசு எவ்வளவு அழகாக என்னை பாதுகாத்தார் என்பதை எனக்குக் காட்டினார். நான் கண்களை மூடிக்கொண்டு மயக்கமடைந்தபோதும், என்னால் பார்க்க முடியாதபோதும், ​​என்னால் உடலை அசைக்க முடியாதபோதும், நான் பாடிய பாடலுக்கு ஏற்ப என்னை அவர் கைவிட வில்லை. அவர் என்னை ஒருபோதும் கைவிடவில்லை. கடல் அலைகள் என்னைச் சூழ்ந்து கொண்டது. என் வாழ்க்கையில் ஒரு புயல் வீசினது. ஆனால் என் கடவுள் என்னை ஒருபோதும் கைவிடவில்லை. 

எனது அறுவை சிகிச்சைக்கு சில நாட்களுக்குப் பிறகு இது புற்றுநோய் அல்ல என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் ஒரு அரிய நோய் என்னை தாக்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக நான் மருந்துகளை எடுத்துக்கொண்டேன். வாழ்க்கை எளிதானது அல்ல. எனது மருந்தின் பக்க விளைவுகள் காரணமாக என்னால் தூங்க முடியவில்லை. ஆனால் இயேசு எனக்கு பெலன் கொடுத்தார். இயேசு என்னுடன் இருந்தார். மிகுந்த சோர்வு மற்றும் பல பக்க விளைவுகள் இருந்தன. ஆனால் இயேசு என்னை கரம் பிடித்து அழைத்துச் சென்றார். சில ஆண்டுகளுக்கு பின் என் வாழ்க்கை கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு வந்தது. 

மூன்று ஆண்டுகளில், இயேசுவோடு கூட நெருங்கி சேர்த்தேன். நான் முன்பை விட அவருடன் மிகவும் நெருக்கமாக சேர்த்தேன். 

இயேசு வாழ்க்கையில் தேவை உள்ளவர்களை சந்திக்க வேண்டும் என்ற தரிசனத்தை கொடுத்தார். வலியால் துன்பப்படுபவர்களுக்காக இயேசுவின் இருதயம் கசிகிறது. இயேசு அவர்களை நேசிக்கிறார், அவர் நம்முடைய வாழ்க்கையை மாற்ற முடியும் என்ற செய்தியை மாத்திரமே நாங்கள் சொல்கிறோம். 

என் வாழ்நாள் முழுவதும், ஏற்றத் தாழ்வுகளின் மத்தியிலும் இயேசு எனக்கு நல்லவராக இருந்தார். என் நல்ல காலங்களில், நான் அவரைப் புகழ்ந்தேன். என் கடினமான நேரத்தில், அவரிடமிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள நான் அவருடைய முன்னிலையில் சென்றேன்.என் பிரச்சினைகளிலிருந்து என்னை வெளியே கொண்டு வருவது எப்படி என்று இயேசுவுக்குத் தெரியும்.. உங்கள் பிரச்சினைகளிலிருந்தும் அவர் உங்களை விடுவிப்பார். சோர்வடைய வேண்டாம். 

நாம் வேதத்தின் வார்த்தைகளை தைரியமாக சேர்ந்து சொல்வோம். எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.

என் அன்பு நண்பரே, வாழ்க்கையின் எதிர் காலத்தை குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா? நீங்கள் இப்போது கடினமான சூழ்நிலையில் இருக்கிறீர்களா? கடவுள் என் வாழ்க்கையில் என்னோடிருந்து நடத்தியது போல, உங்களையும் நடத்த முடியும். அவர் உங்கள் சூழ்நிலைகளை சரி செய்ய முடியும். அவர் உங்களைப் படைத்த கடவுள். உங்கள் வாழ்க்கையை அவரிடம் ஒப்படையுங்கள். முழு மனதுடன் அவரைத் தேடுங்கள். நாம் இப்போது இயேசுவிடம் ஜெபிக்கப் போகிறோம். உங்கள் கையை நம்பிக்கையோடு உங்கள் இருதயத்தில் வைத்து கொள்ளுங்கள். அவர் உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்தவும், நிம்மதியினால் நிரம்பவும் விரும்புகிறார். 

அன்புள்ள இயேசுவே, என் இதயத்திலும் ஆத்மாவிலும் எனக்கு ஒரு சுகம் தேவை. நான் கடந்து வரும் கடினமான நிலைமை உங்களுக்குத் தெரியும். இயேசுவே எனக்கு இப்போது உங்கள் உதவி தேவை. என்னை மன்னியுங்கள், நான் உங்களை இதற்கு முன் தேடவில்லை. நான் தாழ்மையான, நேர்மையான இதயத்துடன் உங்களிடம் வருகிறேன். என் கவலையை எல்லாம் நீக்குங்க. உங்கள் பரலோக அமைதியால் என் இருதயத்தை நிரப்புங்க. எனது வாழ்க்கை மற்றும் எனது எதிர்காலம் குறித்து எனக்கு கேள்விகள் உள்ளன. எனது எல்லா கேள்விகளுக்கும் உங்களிடம் பதில்கள் உள்ளன என்பது எனக்குத் தெரியும். இயேசுவே, தயவுசெய்து என் வாழ்க்கையை மாற்றுங்க. என் வாழ்க்கையை மகிழ்ச்சியாலும் அமைதியாலும் நிரப்புங்க . என் இருதயத்திற்குள் வாருங்கள். நான் இயேசுவின் பெயரில் ஜெபிக்கிறேன், ஆமென். 

சம்பந்தப்பட்ட பதிவுகள்

நீங்கள் இயேசுவை ஏற்று கொண்டீர்களா. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம்.

ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு, உங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.

       

Topics

விடுதலை தியானம் இயேசுவைப் பற்றி